சனி, 29 மே, 2021

மத்திய அரசு கோவாக்ஸின் & கோவிஷீல்ட் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறது? மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...?

 Araathu R : 8 கோடியே 50 லட்சம் டோஸ் கோவாக்ஸின் & கோவிஷீல்ட் ஒரு மாதத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்று மத்திய அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது .
அப்படி என்றால் ஒரு நாளைக்கு 28, 33, 333 டோஸ்கள் என்ற கணக்கு வருகிறது.
இப்போது ஒரு நாளைக்கு 12 லட்சம் முதல் 13 லட்சம் டோஸ்கள்தான் போடப்பட்டு வருகிறது.
மீதி 15 லட்சம் டோஸ்கள் எங்கே ? ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கக்கூடும்.
ஏப்ரல் மாதத்தில் தினமும் 30 லட்சம் டோஸ்கள் போடப்பட்டு வந்தன.
இப்போது 12 - 13 லட்சம் என்று வந்து நிற்கிறது. கடந்த கால தவறை விட்டு விட்டு ,
குறைந்த பட்சம் இந்த மே மாதம் தயாரித்துக்கொண்டு இருக்கும் டோஸ்களையாவது ஏற்றுமதி செய்யாமல் இந்தியாவிற்கே வழங்கினால் , ஒரு நாளைக்கு 28 லட்சம் டோஸ்கள் போட முடியும். இதுதான் சுலபமானது & ப்ராக்டிக்கல்.
இருப்பதை விட்டு விட்டு , மாநிலங்களே க்ளோபல் டெண்டர் விடுவதும் , உனக்கெல்லாம் குடுக்க மாட்டேன் போ என வெளிநாட்டு மருந்து கம்பனிகள் துரத்திக்கொண்டு இருப்பதும் வேதனையான காலத்தில் நடக்கும் அபத்த நகைச்சுவைகள்.


எந்த வெளிநாட்டு கம்பனி என்றாலும் மத்திய அரசு அனுமதித்தால்தான் இந்தியாவிற்குள் நுழைய முடியும். DGCI Approval வாங்காத ஃபைசர் & மாடெர்னா வுடன் ஏன் மாநில அரசுகள் தொடர்பு கொண்டு இப்போது டீல் பேசுகிறன என்றே புரியவில்லை. இப்போதைக்கு கதைக்காகத விஷயம்.
மாநில அரசுகள் சுப்ரீம் கோர்டை நாடி , இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை பெருமளவு இந்தியாவிற்கே கிடைக்கும்படி வழிகாட்டுதலோ அல்லது தீர்ப்போ பெறுவதுதான் உடனடியாக கிடைக்கும் நடைமுறைத் தீர்வாக இருக்கும்.
உலக அளவில் டெண்டர் கோருவது சிக்ஸர் அல்ல, எந்த வழியிலாவது தடுப்பூசியை மாநிலங்களுக்கு கொண்டு வருவதுதான் சிக்ஸர்.
நிதின் கட்காரி கூட கேட்டு விட்டார். மற்ற தடுப்பூசி நிறுவனங்களுக்கும் தடுப்பூசி தயாரிக்க அனுமதி தர வேண்டும் என்று. ஆனால் என்ன எழவு டீலிங்கோ இந்த விஷயம் அந்தரத்திலேயே நிற்கிறது. சீரம் இன்ஸ்டிட்யூட் பூனவாலா இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாரோ என்னவோ. பாரத் பயோடெக் ஆவது ஒத்துக்கொள்ளலாம். அதுவும் கிடையாது. இதில் ஒரு ஈகோவும் இல்லை. பணம் மற்றும் லாபம் குறைந்து விடும் என சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் பயப்படலாம். இதை மத்திய அரசுதான் பணம் கொடுத்தோ , உத்திரவாதம் கொடுத்தோ சரி செய்ய வேண்டும். நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வேண்டியதுதான். அதற்காக கொள்ளை லாபத்தை கற்பனை செய்து கணக்குப் போட்டு அதை மட்டுமே நோக்கியா இந்த பேண்டமிக்கில் செயல்பட முடியும் ?
எல்லாம் செத்த பிறகு யாரிடம் தடுப்பூசியை விற்று லாபம் பார்ப்பீர்கள் ?
Meanwhile, questions were raised this morning after the centre told the Kerala High Court that 8.5 crore doses of Covishield and Covaxin were being produced per month in India. 

The daily vaccination rate, however, is between 12 and 13 lakhs - less than 60 per cent of the number of vaccine doses produced in the country every 24 hours - source NDTV

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக