வெள்ளி, 7 மே, 2021

புதிய தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் கடந்து வந்த பாதை

தமிழ் நாட்டின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் வெ. இறையன்பு அவர்களின் கல்வித் தகுதிகள்..!!
விவசாயத்தில் இளங்கலைப் பட்டம்
வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம்
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்
தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம்
உளவியலில் முதுகலைப் பட்டம்
வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம்
ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம்
மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம்
இந்தி மொழியில் பிரவீன்
சமஸ்கிருதத்தில் கோவிதஹா
விவசாய இளங்கலைப் பட்டத் தேர்வில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

 puthiyamugam.com :  தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக ஆளுநரின் ஒப்புதலுடன் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்த வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.
தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


1996-2001 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தனிச் செயலராக இருந்தவர் இறையன்பு. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக திறம்பட செயல்பட்டவர்.‌ 2006ல் சுற்றுலா துறை செயலராக இருந்த போது சிங்கப்பூரில் ஏற்பட்ட கார் விபத்தில் கால் உடைந்ததால் ஒதுங்கி இருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஒதுங்கி இருந்தார்.

எழுத்தாளர் , கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர் என இவர் பன்முகத் திறமைகளுடைய ஆளுமை கொண்டவர்.

இறையன்பு மூன்று டாக்டரேட் (டி.லிட்) பட்டம் பெற்றவர். 153 புத்தகங்கள் எழுதியுள்ளார். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.
தமிழார்வமும் பற்றும் கொண்ட குடும்பம் என்பதும், திமுக சார்பாளர் என்று மற்ற அரசுகளால் ஒதுக்கப்பட்டவர் என்பதும் இவருக்கு இந்த பொறுப்பை கொண்டு வந்து கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக