ஞாயிறு, 23 மே, 2021

திமுகவின் எதிரிகள் சும்மா இருக்க மாட்டார்கள் சதிகள் தொடரும் ..

May be an image of 2 people and text

செல்லபுரம் வள்ளியம்மை : கலைஞர் கைதின் போது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்  தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு திடுக்கிட்டேன்  
அதன் பின்பு அதை பற்றி திரு.சோ. ராமசாமி தொலைக்காட்சியில் கூறிய வார்த்தைகள்தான் ஆக கொடுமையானவை
ஜெயலலிதா ஒரு சைக்கோ கேஸ் பேராசையும் அகம்பாவமும் அளவு கணக்கில்லாமல் அப்போது அவரிடம் குடிகொண்டிருந்தது..
ஆனால் சோ ராமசாமி ஒரு வழக்கறிஞர் பத்திரிகை ஆசிரியர் ஒரு நடிகர் கதைவசன கர்த்தா இன்னும் என்னன்னவோ தகுதிகள் எல்லாம் உடையவர்.
இந்த பாதகத்தை பற்றி சர்வ சாதாரணமாக,   சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று விட்டு கலைஞர் கைதை  நியாயப்படுத்தி ஏதோதோ கூறினார்.
எல்லா சட்டங்களையும் தூக்கி வீசிவிட்டு தனது எல்லை மீறிய அகங்காரத்திற்கு தீனி போட்ட சம்பம் இது  இதை எப்படி சோ ராமசாமி போன்றவர்களால் நியாய படுத்த முடிந்தது?
பதில் மிகவும் எளிதானது
பார்ப்பனர்களின் .. அதாவது பார்ப்பனீயத்தின் முதல் குறியாக அன்று கலைஞர்தான் இருந்தார்


கலைஞரை அப்புறப்படுத்தி விட்டால் திமுகவை அகற்றி விடலாம் என்று பார்ப்பனீயம் கருதுவதால்தான் இந்த வன்மம்
அவர்களின் ஆயிரமாண்டு கனவுகளை எல்லாம் வெறும் கனவுகளாக்கியே வரலாறு கண்டது திமுக.
இந்த சம்பவத்தில் சோ போன்றவர்கள் மட்டுமல்ல இன்னும் பல பார்ப்பனீய சக்திகள் ஆனந்த கூத்தாடின என்பதை மறக்க கூடாது
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்
மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது என்பது தெரிகிறது
திமுகவின் இன்றைய எழுச்சி அவர்களுக்கு சகிக்க முடியாத ஒரு கோபத்தை அளித்து கொண்டிருக்கிறது
இதை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை
இனி சும்மா இருக்க மாட்டார்கள்   
திமுக தலைவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காலக்கட்டம் இது
எதாவது உருவத்தில் சதி முயற்சியில் ஈடுபடுவார்கள்.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக