புதன், 26 மே, 2021

ராஜகோபால் லேப்டாப்பில் மாணவிகளின் ஆபாச போட்டோ.. பெரும்பாலும் விஐபிகளின் மகள்கள்.. அதிர்ந்த போலீஸ்

 Veerakumar  - tamil.oneindia.com :   சென்னை: பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால், கடந்த 5 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் ஆபாச படங்களை பெற்றதாக, அந்த படங்களை உடன் பணியாற்றும் 3 சக ஆசிரியர்களுக்கு பகிர்ந்து ரசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு மாணவிகள் முன்பாக வந்து நிற்பது, ஆபாச மெசேஜ் அனுப்புவது என பல்வேறு புகார்களுக்கு உள்ளானவர் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்
பிரபலமான பள்ளி இதனிடையே, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கே.கே.நகரிலுள்ள பத்மசேஷாத்ரி சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளராக ஷீலா ராஜேந்திரன் உள்ளார். பிரபலமான பள்ளி இது. எனவே, சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் குழந்தைகள் என இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.



ஆன்லைன் வகுப்புகள் இந்த பள்ளியில் ராஜகோபாலன் அக்கவுண்டன்சி மற்றும் வணிகவியல் துறையின் ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்தார். கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது என்பதால் ஆசிரியர்களும் வீடுகளில் இருந்தே அவரவர் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் மெசேஜ் ராஜகோபாலன் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி பாடங்களை ஆன்லைன் வகுப்பு நடத்தியுள்ளார். வகுப்பு முடிந்த பிறகு இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்து மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டி மாணவிகளிடம் ஆபாச படங்களை பெற்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செல்போன், லேப்டாப் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட பத்மசேஷாத்ரி பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நியைத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமி நேரடியாக பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகிகள் மற்றும் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினார். அப்போது ராஜகோபாலனின் செல்போன், லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போதுதான், ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதியானது

போஸ்கோ சட்டம் ஆசிரியர் நங்கநல்லூர் இந்து காலனி 7வது தெருவை சேர்ந்தவர். அவர் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 12 போக்சோ சட்டம் 2012 11(i)(ii)(iii)(iv) மற்றும் 354(ஏ), 509, 67,67 (எ) தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தற்போது ராஜகோபாலன் நீதிமன்றக் காவலில் இருக்கிறார்

கண்டுகொள்ளாத பள்ளி ராஜகோபாலன் லேப்டாப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, ராஜகோபாலனை போலீசார் 5 நாள் காவலில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறியபோது, ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது பிடிக்காத மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதை ஆசிரியர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேலும் அதிகமாக மாணவிகளை மிரட்டி தன்வசப்படுத்தியுள்ளார்.

ஆபாச படங்கள் மாணவிகளின் செல்போன் எண்களை அவர்களிடமே வாங்கி இரவு நேரங்களில் ஆபாச மெசேஜ் செய்து ஆபாச படங்களை பெற்று ரசித்து வந்துள்ளார். அப்படி பெறப்பட்ட மாணவிகளின் ஆபாச படங்களை ஆசிரியர் தனது செல்போனில் இருந்து லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். பெற்றோருக்கு தெரியாமல் சில மாணவிகளை ஆசிரியர் தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று சில்மிஷம் செய்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் அவர் வைத்திருந்தார். அதே பள்ளியில் பணியாற்றி வரும் 3 ஆசிரியர்களுக்கு மாணவிகளின் ஆபாச படங்களை பகிர்ந்து சேர்ந்து ரசித்துள்ளார்.

5 ஆண்டுகளாக மிரட்டல் ராஜகோபாலன் செல்போன் மற்றும் லேப்டாப்புகளை ஆய்வு செய்த போது, லேப்டாப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததும், கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளை மிரட்டி ஆபாச படங்களை வாங்கி சேகரித்து வைத்திருந்ததும் தெரிந்தது. பெரும்பாலான மாணவிகள் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் மகள்கள் எனத் தெரிகிறது.

பெற்றோர்கள் பிஸியாக இருப்பதால் மகள்களிடம் பள்ளி விவகாரங்களை அவர்கள் காது கொடுத்து கேட்காததும், நடவடிக்கைகளை கண்காணிக்காததும் ஆசிரியருக்கு சாதகமாகியுள்ளது. இவ்வாறு ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புகார் அளிக்க வாட்ஸ்அப் நம்பர் புகார் அளிக்க வாட்ஸ்அப் நம்பர் ராஜகோபாலன் மீது பாதிக்கப்பட்ட முன்னாள் மற்றும் தற்போது படித்து வரும் மாணவிகள் புகார் அளிக்க விரும்பினால் ஆன்லைன் மூலமும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஜெயலட்சுமியின் 94447 72222 வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம், அப்படி புகார் அளிக்கும் மாணவிகள் குறித்தும் அனைத்து விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக