வெள்ளி, 7 மே, 2021

உதயநிதி பொறுப்பில் பொதுமக்களின் கோரிக்கைகள் மீதான தீர்வு சிறப்பு பிரிவு

Udhayanidhi Stalin: எய்ம்ஸ் செங்கலை திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது  புகார்! - case filed against udhayanidhi stalin for stole aiims brick |  Samayam Tamil
tamil.samayam.com :கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு என்று ஸ்டாலின் வாக்குறுதி.
வாக்குறுதியை நிறைவேற்ற உதயநிதி தலைமையில் சிறப்பு பிரிவு.
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக பொதுமக்களின் குறைகள் கோரிக்கை மனுக்களாக பெறப்பட்டன.
திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.
தமது இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில், கிராம சபை கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி தலைமையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டாலினின நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட உள்ள இப்பிரிவின் தலைமை பொறுப்பில் இருக்க போகும் உதயநிதி, மனுக்கள் தொடர்பாக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக