திங்கள், 3 மே, 2021

திமுக மீது அவதூற்றை பரப்பிய பத்திரிகையாளர் கே ஆர் அதியமான் மீது சட்ட நடவடிக்கை?

May be an image of 1 person, outdoors and tree
May be an image of text that says 'σσο ps://eservices.tnpolice.gov.in Name Gender BALAMURALI Date of Birth MALE 28/02/1987 Address Mobile No. E-Mail ID Subject Detalls of Complaint Date of Occurrence CYBER OFFENCES (இனை 03/05/2021 Place of Occurrence SOCIAL MEDIA. Description REGARDING THE NEWLY ELECTED GOVERNMENT OF THE STATE OF TAMILNADU AND ITS MEMBERS OF THE DMK PARTY, SOME ANTISOCIAL ELEMENTS HAVE SPREAD FALSE NEWS WITH Want to attach documents [Max. 500KB (PDFPNG,JPEG) files allowed] Yes No File Upload ChooseFile No file chosen social ipg 159.0 KB Available File 341.0KR'கார்த்திக் புகழேந்தி  :காலை ஏழுமணியளவில் பத்திரிகையாளர் அதியமான் ஒரு பதிவு எழுதுகிறார். புதிதாக அமையவுள்ள அரசு பற்றித் தன் தொழிலதிபர் நண்பருடனான செல்போன் உரையாடல் குறித்தது அந்தப் பதிவு. ;"கேள்விப்பட்டேன். சொன்னேன்" என்கிற ரீதியிலான புறணி பேசும் பதிவு அது.
48 நிமிடங்கள் கழித்து அது என் கண்ணில்பட்டபோது, அதை நான் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனது பக்கத்தில் "Fiction writer எல்லாம் பிச்சை வாங்கணும்" என்று பதிந்திருந்தேன்.
அதில் ஏன் தன்னை Tag செய்யவில்லை என்று கேட்ட அதியமானுடன் உரையாடல் முற்றியது.
அந்த உரையாடலிலே நான் அவருடைய பதிவினை Cooked Up Story என்றேன். (கற்பனைக் கதை என்ற சொல்லாடல் அப்போதுதான் எழுந்தது. ) அவர் அதனை மறுத்தார்.
கோபமடைந்தார். என் முட்டாள்தனம் என்றெல்லாம் வார்த்தைகளைச் சிதறவிட்டார். அதன்பிறகே, அதிமுக எஸ்.பி.வேலுமணி அரசு நிலத்தை அபகரித்த பதிவை புகைப்படத்துடன் பதிந்தேன்.
தொடர்ச்சியாக அதியமானின் கருத்து ட்விட்டர் - ஃபேஸ்புக்கில்  விமர்சனத்திற்கு உள்ளானது. பிறகு தான் எழுதிய  பின்னூட்டங்களை நீக்கத் துவங்கிய அதியமான் இறுதியாக, எழுதிய பதிவையும் நீக்கிவிட்டார். (அநேகமாக அவரே சொல்வதுபோல Onlyme-ல் வைத்திருக்கலாம்).
தற்போது, அந்தக் கருத்துக்களில் இலவச கல்வி, இலவச மருத்துவம் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவது குறித்த கம்மெண்ட் ஒன்றை அவர் எழுதாதது போலவும் போட்டோஷாப் செய்தது போலவும் ஒரு சாட்சியம் சொல்லும் பதிவைப் பகிர்ந்திருக்கிறார்.
நகைக்கத்தான் வேண்டும்.
அதியமான் அல்லது அவர் தொடர்புடையவர்கள் இந்த Screen Shoot-கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று குத்துமதிப்பாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு வேலை மெனக்கெட்டு அதியமான் அவர்களை யாரும் வம்பில் மாட்டிவிடத் தேவை இல்லை.
எனினும், நிதானமின்றி பதட்டத்துடன் இருக்கும் அதியமான் அவர்களுக்கு இப்போது ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள தொலைப்பேசி உரையாடலின்படியே, "திருப்பூரில் இருந்து விரிவாக்கத்திற்காக மத்தியபிரதேசத்துக்கு இடம்பெயர்ந்த நிறுவனம்" பற்றிய தரவுகளைத் தாருங்கள். தமிழகத்தின் நன்மைக்காகவேணும் அதைத் தடுத்து நிறுத்தச்செய்யலாம்.
தனியார் செய்தித் தொலைகாட்சியில் உயர்பொறுப்பில் இருக்கும் நீங்கள் ஆதாரமில்லாமல் அப்படி ஒரு கதையைச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என இப்போது நம்புகிறேன். அட்லீஸ்ட் நீங்கள் பணியில் இருக்கும் செய்தி நிருவனத்திலாவது அதன் உண்மை விவரங்களைக் கொடுத்துச் செய்தியாகக் கொண்டுசேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எதற்கு வதந்தி பேசுவதுபோல் பதிவு போட்டு, அது விமர்சனத்துக்குள்ளாகி, பிறகு அழித்து.. அது போட்டோஷாப் என்று ஸ்டண்ட் அடித்து, கேள்வி கேட்பவனை முட்டாள் (Idiot) என்று திட்டி நேர விரயம் செய்ய வேண்டும்...
அன்புடன்,
கார்த்திக் புகழேந்தி
May be an image of 1 person and text that says 'KR Athiyaman அந்த கோவை நண்பர் சொன்னதாக நான் எழுதியது கற்பனையாகவே இருக்கட்டும். ஆனால் சமூகநீதி என்கிற பெயரில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்கிய திமுக இப்போது உரிமைத்தொகை என்கிற பெயரில் குடும்பத்தலைவிகளையும் சோம்பேறிகளாக்க கிளம்பியிருக்கிறது. அதை வீழ்த்தியே ஆகவேண்டும். இப்போது துவங்கினால்தான் திமுக என்கிற தீயசக்தியை 2024லாவது கட்டுப்படுத்தமுடியும்'

May be an image of 1 person and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக