வியாழன், 6 மே, 2021

நடிகர்களின் சர்வாதிகார அரசியல் ! கமல், சீமான் போன்றோருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை

May be an image of 1 person and text that says 'BREAKING NEWS LIVE 9:03 4.2K லகல் ANUJ WEAR WEARMASKS OVES AT RSTVISUAL VISUAL மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் செயல்பாட்டில் ஜனநாயகம் இல்லை- மகேந்திரன் FIRST கட்சியிலிருந்து விலகுவது என்ற கடினமான முடிவை மிக கவனமாக எடுத்துள்ளேன்- மகேந்திரன் NEWS P'
May be an image of 1 person and standing

Abilash Chandran  : நடிகர்களின் சர்வாதிகார மனம்
கமல், சீமான் போன்றோருக்கு ஜனநாயக  நம்பிக்கை இல்லை என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
இந்த பொதுப்பண்பை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடமும் கண்டோம்.
நட்சத்திர வெளிச்சத்தில் மிகையான புகழ், ஈகோவுடன் வளரும் நாயக நடிகர்களுக்கு ஒரு கட்டத்தில் இந்த பெருக்கப்பட்ட ஊடக பிம்பத்துக்கும் உண்மைக்குள் வித்தியாசம் தெரியாதபடிக்கு மனக்குழப்பம் ஏற்படும்.
தானே தன் பிம்பம் என நம்பத் தொடங்கி அதை முன்னெடுப்பவர்களை தன் நட்பு வட்டத்தில் வைத்துக் கொள்வார்கள்.
இதை தொடர்ந்து நிகழ்த்தி நிஜமாக காட்ட ரசிகர் மன்றங்களை நடத்தி படவெளியீடுகளை கொண்டாட்டமாக மாற்றுவார்கள்.
அப்படத்தில் வேலை செய்த யாருமே முக்கியமில்லை, தானே அனைத்துக்கும் மையம் என சித்தரிப்பார்கள்.
இந்த சித்தரிப்புக்கு வணிக லாபம் கிடைப்பதால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இதற்கு உடன்படுவார்கள். அடுத்து இந்த செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட பிம்பத்தை முதலீடு செய்து தமது மிகையான சம்பளத்தை நியாயப்படுத்துவார்கள்.


அந்த வியாபாரம் படுக்கத் தொடங்கியதும் அந்த பிம்ப அரசியலை சினிமாவிலும் பயன்படுத்த முயல்வார்கள்.
அங்கும் அதே ரசிக மன்றங்கள், அதே ஸ்பான்சர்கள், ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க புகழுரைகள், ஊடக வெளிச்சம் என வலம் வரப் பார்ப்பார்கள்.
கடைசி வரை மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், சமூக மேம்பாட்டுக்கான கொள்கைகள் எதுவும் அவர்களிடம் இருக்காது.
அடுத்து கட்சி அரசியலில் ஈடுபடத் தொடங்கியதும் இந்த தன்னை மையப்படுத்திய மிகை பிம்ப கதையாடல்கள் அகங்காரம் எனும் நிலையில் இருந்து சர்வாதிகார விழைவு எனும் ஆபத்தான கட்டத்துக்கு தடம் மாறும்.
என் பேச்சை கேட்காதவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது என்பது தொடங்கி, அனைவரும் காலில் விழ வேண்டும்,
என்னை மறுப்பவர்களிடம் கட்சிக்காரர்கள் பேசக் கூடாது, அவர்களை பச்சை மட்டையால் அடிப்பேன், என்னை எல்லாரும் சதா புகழ வேண்டும்,
சமூகம் முன்னேற நினைப்பவர்களிடம் சர்வாதிகாரமும் வெளிப்படும், நானே சர்வாதிகாரி என இந்த பிதற்றல்கள், கோரல்கள், கூச்சல்கள் வளர்ந்து கொண்டே போகும்.
கமல் இவ்விசயத்தில் ஒரு மென்மையான சீமான். அவ்வளவு தான்!
அவர் கமீலா நாசரை பதவி விலக்கியது, தன் தொகுதி தவிர வேறெங்கும் பிரச்சாரத்துக்கு செல்லாதது, கட்சியின் கொள்கை என்னவெனக் கேட்டால் தன்னைப் பற்றி பேசி தற்புகழ்ச்சியில் ஈடுபடுவது,
டார்ச்சை உதவியாளர்கள் மீது வீசி எறிவது என இந்த குணாதசியத்தை கண்டோம்.
முதல் பலியாடு வெளியே வந்து உண்மையை கக்கி விட்டது!

 

Arun Mo  :கட்சி நடத்த சொன்னால் கார்ப்பரேட் கம்பெனி நடத்துவது, கருப்பு சட்டையை போட்டுக்கொண்டால் பெரியார் என்று

நினைப்பது, ஆனால் பெரியாரின் கொள்கைகள் என்னவென்றே தெரியாமல் வாழ்வது, சினிமா போலவே அரசியலையும் கையாள்வது இப்படியான அரசியல் கட்சிகள் இங்கே வெற்றியடையாது. அரசியல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருக்கும் நபர்களை விடுத்து பணக்காரர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், ஓய்வுபெற்ற மக்கள் நலன் பற்றிய அக்கறையில்லாத அரசு அலுவலர்கள் என இவர்களை கொண்டு அரசியல் செய்வது எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. கட்சி முழுக்க படித்தவனே அதிகம் என்று சொல்வதெல்லாம் இறுமாப்பு. படித்தவனே இங்கு சூதும் வாதும் செய்துக்கொண்டிருக்கிறான். கமல் இனியாவது கள அரசியல் என்ன என்பதை தெரிந்துக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும். சினிமா படப்பிடிப்பிற்கு செல்வது போல் அரசியலை நினைத்துவிடக்கூடாது. ஜனநயகத்தில் ராஜாக்கள் என்று யாரும் இல்லை. ஆனால் சினிமா நடிகர்கள் எப்போதும் தங்களை ராஜாக்கள் என்றேன் நினைத்துக்கொள்கிறார்கள். இந்த தேர்தலில் சினிமா நடிகர்கள் அலை வீசாதது தமிழ்நாட்டிற்கு நல்ல அறிகுறி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக