செவ்வாய், 4 மே, 2021

கோவையில் மார்வாடிகள், மால்வாரிகள், குஜராத்திகள், சிந்தியர்கள் , சீக்கியர்கள்... ஆதிக்கம் பெற்றுள்ள வட இந்தியர்கள்

What do Gujaratis and Marwaris have in common? - Quora
Senthil Prakash Selvaraj :கோவையில் ஆதிக்கம் பெற்றுள்ள வட இந்தியர்கள் யார் யாரென்றால், மார்வாடிகள், மால்வாரிகள், குஜராத்திகள், சிந்தியர்கள் , சீக்கியர்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் மூன்று தலைமுறைக்கு முன் இங்கே வந்தவர்கள்.
இதில் ஆராவல்லி மலைத்தொடருக்கு மேற்கே, ராட்கிளிப் எல்லைக்கு கிழக்கே உள்ள பிகானீர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் பகுதியில் இருந்து பிரிவினையின் போது வந்த மார்வாடிகளே அதிகம்.
 புலம்பெயர்ந்த மார்வாடிகளில் 80% பேர் ஜெயின்கள். அதிலும் ஆதிக்கம் பெற்ற சாதியினர் பாப்னா,மேத்தா மற்றும் டிப்பிரிவால்.
இவர்கள் தொழில் செய்யவே விரும்புவர்,  படிப்புகள் பிடிக்காது.  
இவர்கள் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் 'ராஜஸ்தானி சங்' என்ற பெயரில் ஒரு சங்கத்தை 1972 ல் ஆரம்பித்தனர்,
இவர்களுக்கும் குஜாராத்திகளுக்கும் அப்போது என்ன லடாயோ தெரியவில்லை, போட்டி போட்டு கெத்து காமிக்க ஆரம்பித்தனர்.
1951ல் குஜராத்திகளால் புரூக் பாண்ட் ரோட் அருகில் ஆரம்பிக்கப்பட்ட கிக்கானி பள்ளி இவர்கள் கண்ணை உறுத்த உடனே கடுமையாக நிதி திரட்டி 1964ல் Coimbatore welfare association கட்டுப்பாட்டில் இயங்கும் Shri Nehru Vidyalaya பள்ளியை ஆரம்பித்தனர்.
பூமார்கெட் பகுதியில் இயங்கிய இப்பள்ளி 1973ல் ஆர்.எஸ்.புரத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது,
நான் LKG முதல் +2 வரை இங்கு தான் படித்தேன்.
அந்தப்பள்ளி இயங்கும் விதமெல்லாம்  ஒரு காமெடியான தனிக்கதை. நிர்வாகத்தில் இருந்த பார்ப்பன வில்லிக்கும் எனக்கும் சண்டை வந்ததில் கெமிஸ்டிரி லேபை துவம்சம் பண்ணி ஒரு மாதம் சஸ்பெண்டு ஆகி 5000 ரூபாய் பைன் கட்டியது தான் மிச்சம்,
கதைக்கு வருவோம்..
பின்னர் குஜராத்திகளே வாயடைத்து போகும் விதத்தில் 1989 Shri Nehru Maha Vidyalaya கலை அறிவியல் கல்லூரியை மிகப்பிரம்மாண்டமாக பொள்ளாச்சி, கொச்சின் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் மலுமிச்சம்பட்டிக்கு அருகே ஆரம்பித்தனர்.
இவர்களுக்கு மதப்பிடிப்பு மிக மிக அதிகம்.  எந்தளவிற்கு என்றால் தமிழக சங்கிகள் எல்லாம் சுண்டக்காய் தான் என்று நாமே ஏளனம் செய்யும் அளவு.
 ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். ஜெயின் மதத்தில் பர்யூசன் பர்வ் என்ற 8 நாள் பண்டிகை உண்டு. அக்காலத்தில் அவர்கள் கடுமையான விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
பின் ஏழாம் நாளில் அனைத்து ஜெயின் கோயில்களில் ஒரு ஏலம் நடக்கும்.யார் ஏலம் எடுப்பார்களோ அவர்கள் வீட்டிற்கு சாமி சிலை கொண்டு வரப்பட்டு இரவு முழுவதும் பூஜை நடக்கும்,
சராசரி ஜெயின் கோயில்களின் ஏலமே லட்சங்களில் முடியும். பெரிய கோயில்கள் என்றால் ஏல விலை தாறுமாறாக உயரும். இந்த ஏலம் கவுரவப்பிரச்சனையாகி குடும்பச் சண்டைவரை போகும். ஆனாலும் விட மாட்டார்கள்.
ஒரே இரவில் அந்த கோயில் கோடிகளில் புரளும்.
கடந்தாண்டு கோவை சுக்கிரவார் பேட்டையில் உள்ள ஒரு ஜெயின் கோயிலில் நடந்த ஏலம் இதுவரை ஏலம் போகாத தொகைக்கு போனது என்று என் நண்பனும் அவன் தந்தையும் கூறினர்.(தேராயமாக இரண்டு கோடி, ஒரு இரவிற்கு?).சரியான தொகையை வெளியில் கூற மாட்டார்கள், முக்கியமாக நம்மவர்க்கு,
இதனால் தான் ஜெயின் கோயில்கள் தங்கத்தாலும் மார்பில் கற்களாலும் கட்டப்பட்டு பள பளக்கிறது. இவர்கள் தங்கள் இனத்தவரோடே இணைந்து போவார்கள், சிலர் விதிவிலக்கு.
அதிலும் சிலர் சாதி/மத/இன வித்தியாசம் வெளிப்படையாக பார்ப்பார்கள்
(நானும் இதில் பாதிக்கப்பட்டவன்).
 அப்பார்ட்மெண்ட் கல்ச்சரே இவர்களுக்கு பிடிக்கும்.தாங்கள் வாழும் குடியிருப்பில் வேறொருவர் வந்தால் பூனை மலத்தை  பார்ப்பது போல முகம் சுளிப்பானுங்க
 (கடந்த வருடம் வீடு வாடகைக்கு நான் தேடிச் சென்ற போது கிடைத்த அனுபவம்).
இத்தனை ஏன்? கோவையின் உயரமான கட்டிடமான குளோபஸ் நக்சத்திராவில் வீடு வாடகைக்கு வட இந்திய உயர்சாதியினருக்குத்தான் கொடுப்போம் என வெளிப்படையாகவே விளம்பரம் செய்கின்றனர்.
சுருக்கமாக சொல்லனும்ன துட்டு இருந்தாலும்,ஆண்ட பரம்பரையாவே இருந்தாலும் தமிழனுக்கு வீடு நஹி ஹே.....
இவர்களின் தொழிகள் பெரும்பாலும் டெக்ஸ்டைல்,எலெக்ட்டிரிக்கல் மற்றும் ஹார்டுவேர் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.
சாதி மாறி திருமணம்லாம் கனவில் கூட கிடையாது.
புராணப் புளுக்கையை ஹிஸ்டரி என்பவர்கள்.
 'சாதி அடையாளம்' பெயருடன் இணைந்தே இருக்கும்.
தாய்மொழி மார்வாடி, மால்வாரி கூட தெரியாது ஆனா ஹிந்தில ஆத்து ஆத்துனு ஆத்துவானுங்க.
தாய்மொழி பாசமும் குஜராத்திகள் அளவு கூட இல்லை. கண்ணை மூடிக்கொண்டு தாமரைக்கு மட்டுமே குத்துபவர்கள் இல்லையென்றால் ஓட்டே போட மாட்டார்கள் ,
அவர்களுக்கு இது வரைக்கும் கண்ணை உறுத்தும் இரண்டு விசயம் தமிழ்நாட்டின் செழிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு வரலாறு.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலுமே மாறாத மதச்சார்பின்மையும், தமிழ் மொழிப்பற்றும், சாதி இல்லா பெயர்களும் இவர்களுக்கு எரிச்சலூட்டும் விசயங்கள்.
மேல இருப்பதை சொன்னது மார்வாடி தோழன், தேசபக்தர்கள் பொங்க வேண்டாம்.
இஸ்லாமியர்களிடம் அவ்வளவாக நட்பு பாராட்ட மாட்டார்கள்,
லோக்கல் சங்கி கட்சிகளுக்கும் நிதி அளிப்பதாகவும் கேள்விப்பட்டேன்.
 ஆர்.எஸ்.புரம் பூத்தில் பாஜக ஆட்சேர்ப்பு முகாமில் என் பள்ளி சீனியர்களை பாத்தபோது அது உறுதியானது.
அவர்களிலும் திருக்குறளையும்,தமிழையும் படிக்கும் அதிசயப் பிறவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கோவையைச் சுற்றி உள்ள பழமையான சமண கோயில்களைத் தேடி கண்டுபிடித்து சில மார்வாடி குடும்பங்கள் பண்டிகையான பூஜை போட்டு வருகிறார்கள்,
உத: பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கிராமத்தில் உள்ள சமண கோயிலுக்கு ஒரு குடும்பம் மாதம் மாதம் வந்து பூஜை செய்கிறார்கள்.
பெண்ணடிமை பழக்கம் அவர்களிடம்  இருக்கிறது...
நான் பத்தாம் வகுப்பு படிச்ச போது 'திவ்யா'னு ஒரு பொண்ணு கூட படிச்சா. பத்தாங் கிளாஸோட படிப்ப நிறுத்திட்டா. ஆளையே கணோம். அப்புறம் விசாரித்ததில் அவளுக்கு நிச்சயம் செய்து சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டார்களாம்.
இவ்வளோ ஏன்? என் உயிர் தோழனுக்கு இன்னும் இரண்டு ஆண்டில் கல்யாணம். நிச்சயம் செய்தாகிவிட்டது. மணப்பெண் +2 வரைக்கும் தான்.மேற்கொண்டு கல்லூரி அனுப்பவில்லை. இதெல்லாம் விட கொடுமை அந்த பெண்களுக்கு தாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்றே தெரியாது.
வீட்டு வேலை செய்ய டிகிரி எதுக்கு ரேஞ்சுல தான் இருக்காங்க.
அதனால் தான் முன் சொன்ன SNMV கலேஜ் மதியம் முடிந்து விடும். பின் அங்கிருக்கவன் பூரா அப்பா கடை கல்லால உக்காந்து வியாபாரம் பாப்பானுங்க . குடும்ப வியாபாரம் தான் அவர்களுக்கு முக்கியம், அதுக்கு ஏன் காசை செலவு செஞ்சு படிக்கனும்னு வக்கனையா பேசுறவனுங்க
தண்டமா கோடி ரூவா கொட்டி கல்யாணத்த செய்வானுங்க. அதுக்கெல்லாம்.
எளிமை என்பது அவர்களுக்கு எப்போதும் புரிபடாத ஒன்று. இதுவரை சொன்னது ராஜஸ்தானியர்களை பற்றி மட்டும் தான்,
இத சொல்றக்கு நீ யாருனு கேக்குறவனுங்களுக்கு:
பதிநாலு வருசம் மார்வாடிக கூட மார்வாடி ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.
அவனுங்களே பெரும பீத்துனது தான் நான் மேலே சொன்னது எல்லாம்
இன்று இவர்கள் இவ்வளவு செல்வ செழிப்போடும், மத துவேசங்களோடும் நம்மூரில் வாழ முடிகிறது என்றால் இதன் ஆர்டிஸ்ட் இந்து முன்னணி ராமகோபாலனும், இன்னபிற இந்துத்துவ கட்சிகளும்தான்.
இவர்களால் பாதிக்கப்பட்டது இஸ்லாமியர்கள் வணிகம் என்று வெளியில் சொல்லப்பட்டாலும் உண்மையில் கவுண்டர்களின் வணிகமே அதிகம் பாதிக்கப்பட்டது.  
அதுபோல இன்று மார்வாரிகளின் சொத்துக்கள் அனைத்தும் கவுண்டர்களிடமிருந்து வாங்கப்பட்டவைகளே,
வணிகம், மதம் மார்வாடிகளுடையது அதற்கான பாதுகாப்பு இந்துத்துவ கூட்டங்கள் அவ்வளவுதான் இவர்களின் மத அரசியல்.
-ஆதன்
Senthil Prakash Selvaraj
 பதிவிலிருந்து....
 மீள்...

2 கருத்துகள்: