புதன், 12 மே, 2021

அழிந்து போன டோடோ பறவைகள் போலவே தமிழர்களும் ... எதிர்ப்பு காட்டாமல் ஆரியரை வரவேற்ற..

May be an image of 1 person and text that says 'டோடோ பறவையும்... ஆதி தமிழரும்...'

Fazil Freeman Ali  :  டோடோ ப‌ற‌வையும் ஆதித்த‌மிழ‌ரும்
16-ம் நூற்றாண்டின் துவ‌க்க‌த்தில், 1507-ல் அதுவரை மனிதர்க‌ள் வாழ்ந்திராத‌, இய‌ற்கை கோலோச்சிய‌, அழ‌கான‌ தீவு ஒன்றில் ஒரு போர்த்துகீசிய கப்பல் தள்ளாடியபடி கரை ஒதுங்கிய‌து
அடிமை வியாபார‌த்தில் அப்போதெல்லாம் கொடி க‌ட்டிப் ப‌ற‌ந்திருந்த‌ அரேபிய‌ரும் இத்தாலிய‌ரும் இந்த‌ தீவில் அடிமைக‌ளாய் பிடித்து விற்க‌ ம‌னித‌ர்க‌ள் இல்லாத‌தால் ஏமாற்ற‌த்தோடு சென்றிருந்த‌ன‌ர்.
அந்த தீவில் மனிதர்கள்தான் இல்லையே தவிர, அங்கு ஏக‌ப்ப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ள் வாழ்ந்திருந்த‌ன‌, குறிப்பாக‌ பெரும் எண்ணிக்கையில் அந்த‌ ம‌ண்ணின் மைந்தர்களாக ஒரு பெயரிடப்படாத பறவை இனம் அத்தீவு முழுக்க நிரம்பி இருந்தது.
வாத்து அல்ல‌து அன்ன‌ம் போன்ற தோற்ற‌த்தில் அதைவிட‌ பல‌ மடங்கு பருத்து சுமார் 20 கிலோ எடை கொண்டிருந்த‌, தத்தித் தத்தி நடக்கும் பறக்கும் தன்மையற்ற  அப்பறவை, நிலத்திலும் நீரிலும் வாழும் தன்மை கொண்டதாக இருந்தது.
பெய‌ரிடப்ப‌டாத‌ அந்த‌ தீவில் அப்போதைக்கு வேறு யாரும் குடியேறி வாழ்ந்திருக்க‌வில்லை.

அந்த‌ தீவிற்கு முத‌லில் பெய‌ரிட்ட‌து டொமிங்கோ பெரேரா என்ற‌ அந்த‌ க‌ப்ப‌லின் த‌லைவ‌ன். பெய‌ர் கார‌ண‌மே அன்ன‌ம் போன்ற‌ தோற்ற‌ம் கொண்டிருந்த‌ இந்த‌ ப‌ற‌வைக‌ள் தான்
The Portuguese seaman Domingo Fernandez Pereira sighted modern day Mauritius in 1507 and named It originally as “Ilha Do Cerne” (Island of the Swan)
கப்பலில் வந்த அன்னிய‌ர்க‌ள் ஆபத்தானவர்களா, நண்பர்களா என ஆராய்ந்து பார்க்காமல் ஆயிரக்க‌ண‌கில் அந்த‌ பறவைகள் அன்னிய‌ரான‌ போர்த்துகீசியரை வரவேற்றன‌.
வந்தாரை வரவேற்பதில் தமிழின பண்பாட்டை போன்றே அந்த பறவையின் குணமும் இருந்திருந்த‌து.
கப்பலில் ப‌சியாலும் தாக‌த்தாலும் தண்ணீரும் உண‌வும் தேடி வந்தவர்கள் அப்பறவையை பண்டமாகவே பார்த்தார்கள். அப்பறவைக‌ளோ அது புரியாமல் அவர்களை சூழ்ந்து கொண்டு வ‌ர‌வேற்று நின்ற‌ன‌.
அவ‌ர்க‌ளில் ஒருவன் ஒரு பறவையை பிடித்து அத‌ன் கழுத்தை திருகி கொன்றபோதும் மற்ற பறவைகள் விலகி ஓடாமல் இந்த‌ அன்னிய‌ மனிதர்களிடம் நெருக்கத்துட‌னேயே இருக்க, அங்கயே நெருப்புமூட்டி கொல்ல‌ப்ப‌ட்ட‌ அந்த‌ பறவையை உணவாக்கினார்கள்.
குடிக்க தண்ணீரும், ஆகாரத்திற்கு அபலை பறவையும் விருந்தாக அமைய தண்ணீர் தேடி வந்த போர்த்துகீசியர்கள் அங்கயே தங்கினர், குடியேறின‌ர்.
அத்தீவு முழுக்க இயற்கை எழிலோடு இருக்க‌, பறவைகளின் எச்சங்கள் சிற‌ந்த‌ உரமாய் அமைய‌, விவசாயம் செய்யவும் ஏற்ற இடமாக அது இருந்தது.
இந்த‌ போர்ச்சுக்கீசிய‌ரின் குடியேற்ற‌த்துக்குப்பின் அவ்வ‌ழியே செல்லும் க‌ப்ப‌ல்க‌ளுக்கு குறிய‌கால‌ த‌ங்குமிட‌மாக‌வும் இத்தீவு மாறிப்போன‌து. ந‌ல்ல‌ நீரும் உண்ண‌ உண‌வும் இருக்க‌வே ஒரு ட்ரான்சிட் துறைமுக‌மாகிப்போன‌து இத்தீவு.
இப்ப‌டி, துர‌த்தி வேட்டையாட‌ம‌லேயே கிடைக்கும் கொழுத்த‌ உணவுக்காக இந்த‌ பறவைகளை கொன்று உண்டதால், ஒரு நூற்றாண்டுக்குள் அந்ததீவில் அந்த‌ பறவை இனமே அழியும்  நிலைக்கு ஆளானபோதுதான் அந்த‌ மனிதர்களுக்கு ஒன்று உறைத்தது.
நம் உணவுத் தேவைக்காக,
"ஆடு  கசாப்பு கடைக்காரனை நம்பும்" என்ற சொல்ல‌டை போல
நம்மிடமே ஓடிவரும்  இப்பறவைக்கு நாம் இதுவரை பெயர் வைக்கவில்லையே என்று..?
ஆதங்கப்பட்டு கையில் மது கோப்பையுடன் என்ன பெயர் வைக்கலாம் என சிந்தித்ததில் ஒருவனுக்கு ஒரு பெயர் தோன்றியது அதுதான் “டோடோ”.
"டோடோ” என்றால் "அறிவற்றவன்" ம‌ற்றும் எதிர்ப்பு காட்டாத‌வ‌ன் என்று பொருள்..!
ஆம், அறிவற்றது தான் அப்பறவை. அறிவு இருந்திருந்தால் கொல்ல வந்தனிடமே தனது அன்பை வெளிக்காட்டி இன்று இப்பூமியில் அழிந்துபோன இனங்களின் பட்டியலில் டோடோ இடம்பிடித்து இருக்குமா..?
ஆம் எதிர்ப்பு காட்ட‌துதான் அப்ப‌ற‌வை. வ‌ந்தாரை வாழ‌வைத்தால் தாமும் ந‌ன்றாக‌ வாழ‌லாம் என்று சூதுவாது தெரியாம‌ல் ந‌ட்போடு ப‌ழ‌கி த‌ன் இன‌மே அழியும் நிலைக்கு த‌ன்னை உட்ப‌டுத்தியிருக்குமா இந்த‌ ப‌ற‌வை..?
இந்த "டோடோ" ப‌ற‌வை போலத்தான் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆதிகுடிக‌ளும் இருந்தார்கள், கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கால்நடைகளாக கைபர் கணவாய் வழியாக ஒரு கூட்டம் இந்த‌ தீப‌க‌ற்ப‌த்திற்குள் நுழைந்தபோது...
மொரீஷியஸ் தீவிற்கு வந்த போர்த்துகீசியரை ஆச்சர்யத்தோடும் அன்போடும் பார்த்த டோடோ பறவையை போன்றே...
அன்றைக்கு கைபர் கணவாய் வழியாக வந்த கணவான்களை அன்போடு வரவேற்றார்கள் பண்டைய இந்த‌ ம‌ண்ணின் பூர்வ‌குடியின‌ர்.
ஒரே வித்தியாச‌ம், வந்து குடியேறிய‌ இந்த‌ வ‌ந்தேறி ஆரியர்கள், இந்த‌ ம‌ண்ணின் மைந்த‌ர்களை அழித்து ஒழித்துவிட‌வில்லை. மாறாக‌ சாதி அடிப்படையில் பிரித்து அடிமைப்படுத்தினார்கள். அழித்தலை விட அடிமைப்படுத்துவது ஆதாயமிக்கதாக அந்த‌ வ‌ந்தேறிய‌ ஆரியர்களுக்கு இருந்தது.
தன்னை அழித்தவர்க‌ளிட‌மே அடைக்கலம் புகுந்த டோடோ பறவையை போல், பண்டைய இந்தியர்கள் சாதிய அடிமை முறையை வாழ்விய‌லாக‌ மெல்ல‌மெல்ல‌ ஏற்றுக்கொண்டன‌ர்.
எதிர்த்த‌வ‌ர்க‌ள் கொடூர‌மாக‌ கொல்ல‌ப்ப‌ட‌, த‌ம் ம‌ன்ன‌ர்க‌ளே இந்த‌ வ‌ந்தேறிக‌ளின் சூழ்ச்சியில் வீழ்ந்து அறிவும் அற‌முமற்ற ஆட்சிமுறை அமைக்க‌, ஆரியர்களின் கற்பனை கடவுளின் பிற‌ப்பால் உய‌ர்வு தாழ்வு க‌ற்பிக்கும் ஈன‌த்த‌மான‌ கட்டளைக்கு கீழ்படிந்து வாழ துவங்கினர்.
மொரீஷியஸ் பறவைக்கு "அறிவற்றவன்" என்று போர்சுக்கீசிய‌ன் பெயர் சூட்டியது போவே... இம்மண்ணின் மைந்தர்களுக்கு "சூத்திரன்" என்று இந்த‌ அன்னிய‌ர் பெயர் வைத்தார்கள்.
அன்பு காட்டிய‌ ப‌ற‌வை அறிவ‌ற்ற‌து என்று பெய‌ர்சூட்ட‌ப்ப‌ட்ட‌துபோல், எல்லா வாழ்விய‌ல் சூத்திர‌ங்க‌ளும் திற‌ம்ப‌ட‌ க‌ற்று உய‌ரிய‌ வாழ்க்கை வாழ்ந்த‌வ‌ன், அதே சூத்திர‌ன் என்ற‌ வார்த்தையால் கேவ‌லமாக‌ பார்க்க‌ப்ப‌ட்டான்.
நாதியற்றுப்போன‌ டோடோ பறவையை போல், இந்திய பூர்வ‌குடிக‌ள் நாதியற்றுப்போய் ஆரிய அடிமைகளாக ப‌ல‌நூறு ஆண்டுக‌ள் வாழ்ந்த நிலையில்தான்,  அடிமைத்தனத்தில் இருந்து தற்காலிமாக த‌ம்மக்களை விடுவிக்க புத்தர் போராடினார்.
ஆம், புத்தர்கூட‌ தற்காலிகமாகத் தான் இம்ம‌க்க‌ளை விடுவித்தார். கார‌ண‌ம், மீண்டும் கி.பி நான்காம் நூற்றாண்டில் சானாதன சாதிய ஆரிய அடிமைமுறை மீண்டும் அரிய‌ணை ஏறிய‌து.
காலங்கள் ஓடின, ஆட்சிகள் மாறின, நவ நாகரீக‌ங்கள் தோன்றின. ஆனால் அடிமை முறை ம‌ட்டும் அப்படியே நீடித்துக்கொண்டிருக்கிற‌து.
"யாதும் ஊரே யாவ‌ரும் கேளிர்" என்ற‌ க‌ணிய‌ன் முத‌ல் "பிற‌ப்பொக்கும் எவ்வுயிர்க்கும்" என்ற‌ வ‌ள்ளுவ‌ர் வ‌ரை....
19ஆம் நூற்றாண்டின் ஜோதிராவ் புலே முத‌ல் 20ஆம் நூற்றாண்டின் பெரியார், அம்பேத்கர் வ‌ரை...
ஆரிய சித்தாந்தத்தின் சாதிய அடிமைத்தனத்தை ஒழித்து சுயமரியாதையை காக்க தன் வாழ்நாள் முழுக்க ப‌ல‌ர் போராடியும், அடிமை முறை 21ஆம் நூற்றாண்டிலும் தொட‌ர்கிற‌து, சாதி என்ற‌ அசிங்க‌மான‌ ச‌மூக‌ அமைப்பு முறையில்.
கொல்ல வந்தனிடமே தனது அன்பை வெளிக்காட்டி இன்று இப்பூமியில் அழிந்துபோன டோடோ பறவை போன்றே அடிமைகளை, அட்டைக்கத்தி ஆட்சியாளர்களாக ஆளவைத்து  வ‌ந்தேறிக‌ள் இந்நாட்டை ஆண்டு வருகிறார்கள்.
மொரீஷியஸ் தீவின் வெள்ளாந்தி டோடோ பறவை போல, அடிமை வாழ்வைக்கூட போராட்ட‌மின்றி ஏற்கும் மனநிலையில் பெரும்பான்மையான‌ மக்கள் இன்றும் வாழ்கிறார்கள்.
அண்டி வந்த மக்களை நயவஞ்சகத்தால் அடிமையாக்கி எக்காலத்திலும் ஆட்சி அதிகாரத்தை தன்கைக்குள் வைத்திருக்கிற‌து ஆரியமென்ற‌ பார்ப்ப‌னிய‌ ச‌னாத‌ன‌ம்.
அன்பும், ப‌ண்பும் அனைவ‌ரிட‌மும் காட்ட‌ப்ப‌ட‌வேண்டிய‌ உய‌ர் குண‌ங்க‌ள்தான். ஆனால் த‌வ‌றான‌ ம‌னித‌ர்க‌ளிட‌ம் தொட‌ர்ந்து அவை காட்ட‌ப்ப‌டும்போது, அது காட்டுப‌வ‌ருக்கு எதிராக‌வே த‌வ‌றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ப‌த‌ற்கு டோடோவும் ஆதித்த‌மிழ‌ர்க‌ளுமே ந‌ல்ல‌ உதார‌ணங்க‌ள்.
 

ஏற‌க்குறைய‌ அழிந்துபோன டோடோ ப‌ற‌வை இன‌த்திற்கு மீண்டும் புத்துயிரூட்ட‌ அய‌ராது வ‌ழி தேடி ஆய்கிற‌து ந‌வீன‌ ப‌ரிணாம‌ உயிரிய‌ல்.
சூடு சுர‌ணை அற்றுப்போய் ப‌த‌வி சுக‌த்திற்காக‌ த‌ன் இன‌த்தையே விற்கும் த‌லைமைக‌ளிட‌மிருந்து விடுத‌லை தேடி அலைகிற‌து ந‌ம் ச‌ம‌கால‌ அர‌சிய‌ல்.
ச‌மீப‌த்தைய‌ தேர்த‌ல் முடிவுக‌ள் மூல‌ம் இது சாத்திய‌மாகுமா என்று கால‌ம்தான் ப‌தில் சொல்லும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக