சனி, 8 மே, 2021

இலவசங்கள் அல்ல அவை ஏணிப்படிகள்! இலவச பேருந்து பயணம்

May be an image of 1 person
அனிச்சம் கனிமொழி : வீட்டுக்கு அருகில் இருக்கும் எலுமிச்சை மரத்தில் பறித்த கனிகளையும் .. .அரளி , மல்லி முல்லை என வீட்டைச் சுற்றி பூக்கும் பூக்களையும் ... டவுனில் இருக்கும் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருவார் ஒரு ஆத்தா... காலை 5 மணிக்கு வந்து பகல் 11 மணிக்கு வீடு செல்லும் வரை ஒரு டீ மட்டுமே உணவாக உண்டிருப்பார் ...
இன்று காலை வழக்கம் போல பேருந்தில் ஏறி டிக்கெட்டுக்கு பணத்தை சுருக்கு பையில் தொழவிக் கொண்டிருக்கையில்...
இனிமே உங்களுக்கு டிக்கெட் இல்ல , பைய உள்ள வைங்கனு கண்டெக்கட்டர் சொல்லுகிறார் ...
திரும்பி ஊருக்கு போறப்பனு ஆத்தா கேட்க, இனி எப்பவுமே இல்லனு அருகில் இருக்கவங்க சொல்றாங்க வழக்கமாக ஒன்பது மணிக்கு டீ வாங்கி குடிக்கும் ஆத்தா இன்று 7 மணிக்கே வாங்கிக் குடிக்கிறார் ...
டீ வாங்கும் போதே 9 மணிக்கு 3 இட்லி கொண்டு வந்து குடுனு டீக்கடைக்கார பையனிடம் சொல்லுகிறார்
பஸ் டிக்கெட் 20 ரூவா இனிமே மிச்சம்னு இந்த ஆத்தா ஊர்ல போயி சொன்னா ...
இன்னும் மூனு நாலு பெண் விற்பானையாளர்கள் நாளையிலிருந்து அந்த சந்தைக்கு வரப் போறாங்க ...
** இலவசங்களால் தான் இம்மாநிலம் வீழ்ந்தது எனும் விசம பிரசாரத்தை நம்பிக் குழம்பும் ஏதுமறியாத ; எடுப்பார் கைப்பிள்ளைகளுக்கு இந்த ப் பதிவை சமர்ப்பிக்கிறேன் ....
சோற்றுக்காக சுற்றத்திடம் கையேந்தாமல் சுயமாக நிற்க எத்தனிப்பவளுக்கு ...
ஏணிப்படி இந்தத் திட்டம்!
டீ மட்டுமே குடித்து எரிந்து கிடந்த வயிற்றுக்கு மூன்று இட்லிகளால் நிறைவை தந்தது இந்தத் திட்டம்!!
திராவிடத்தால் தொடர்ந்து வாழ்வோம்.
அனிச்சம் கனிமொழி
08.05.2021.May be an image of 1 person and text that says '@gowtham_raj இது பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் இல்லை.. காய்கறி, தயிர் மோர் விக்கிறவங்க, வீட்டு வேலை, சித்தாளு, ஜவுளி கடை, நகை கடை, ஃபேன்சி ஸ்டோர்ஸ், சூப்பர் மார்கெட் மாதிரி பல இடங்கள்ல வேலை செய்யும் பெண்களுக்கான சம்பள உயர்வு.. எலைட் பரதேசிங்களுக்கு இதெல்லாம் என்னைக்குமே புரியாது. Translate Tweet 1:45 PM 08 May 21 Twitter for Android'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக