ஞாயிறு, 2 மே, 2021

மம்தாவின் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி என அறிவிப்பு! நீதிமன்றம் செல்கிறர் மம்தா திடீரென மாறிய முடிவுகள்

 நக்கீரன் செய்திப்பிரிவு :   :தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
 மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 213 இடங்களில் முன்னணி வகிக்கிறது.
பாஜக கூட்டணி 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் வெற்றி உறுதியாகியுள்ளது.
 அதுநேரத்தில் 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட மம்தா பானர்ஜி, திடீரென தோல்வியடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மோசடிகள் நடந்தது என தன்னிடம் தகவல் இருப்பதாக கூறியுள்ள மம்தா, தேர்தல் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "நந்திகிராமைப் பற்றி கவலைப்பட வேண்டாம், போராட்டத்திற்காக நீங்கள் எதையாவது தியாகம் செய்ய வேண்டும். நான் ஒரு இயக்கத்தை எதிர்த்துப் போராடியதால் நந்திகிராமுக்காக சண்டையிட்டேன். அது பரவாயில்லை. நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் அளிக்கட்டும். நான் அதை ஏற்றுக்கொள்வேன். முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவித்த பிறகு, சில மோசடிகள் செய்யப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே நான் நீதிமன்றம் செல்வேன். அங்கு அவை என்னென்ன தகவல்கள் என்பதை வெளிப்படுத்துவேன்" என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக