சனி, 29 மே, 2021

இளையராஜாவின் மலேசிய ரசிகர் இறுதி நிகழ்வில் இளமை என்னும் பூங்காற்று பாடி நண்பர்கள் இறுதி அஞ்சலி

சினிமா-மாலைமலர் : இளைஞர்கள் சிலர் இளையராஜா பாடல்கள் பாடி நண்பனின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மலேசியாவில் வசித்து வந்த இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர், தான் உயிரிழந்த பின், தன்னை இளையராஜா பாடலோடு வழியனுப்பி வைக்கும் படி தனது நெருங்கிய நண்பர்களிடம் முன் கூட்டியே கூறி இருந்தாராம்.
சில தினங்களுக்கு முன் அந்த இளையராஜா ரசிகர் மறைந்து விட, அவரது இறுதி ஆசையை அவரின் நண்பர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அந்த இளையராஜா ரசிகரின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சிகளும், அவரது நண்பர்கள் மாஸ்க் அணிந்தவாறு கூடி நின்று, ‘இளமை எனும் பூங்காற்று’ உள்ளிட்ட இளையராஜாவின் சில பாடல்களை பாடி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அந்த இளையராஜா ரசிகரின் வயது என்ன, அவர் எதனால் உயிரிழந்தார் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக