zeenews.india.com :தமிழக சட்டமன்ற (TN Assembly) முதல் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.
அவர்கள் பதவியேற்றுக்கொள்வதற்கு வசதியாக தற்காலிக அவைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit) நியமித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொள்கின்றனர். நாளை (புதன்கிழமை) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக