ஞாயிறு, 16 மே, 2021

ப.சிதம்பரம் : குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்? கொரோனா இறப்புக்களை மூடி மறைக்கும் மத்திய அரசு

May be an image of ‎1 person, fire and ‎text that says '‎BREAKING NEWS SUN NEWS குஜராத்தில் இறப்புகள் மறைக்கப்படுகிறதா? -ப.சிதம்பரம் குஜராத்தில் கடந்த மார்ச் 1 முதல் மே 10 வரை 65,805 பேருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், 4,218 பேர் மட்டுமே கொரோனா பலி என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது எப்படி? -உயிரிழப்புகளின் வேறுபாட்டை குஜராத் அரசும் மத்திய அரசும் விளக்க வேண்டும் என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்! ۔L SUNNEWS sunnewslive.in BREAKING NEWS 16MAY2021‎'‎‎

மாலைமலர் :இந்தியா கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது தொடர்பாக போஸ்டர் ஒட்டியதாக குற்றம்சாட்டி 24 பேரை டெல்லி போலீசார் கைது செய்ததற்கு ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான மத்திய அரசின் அணுகுமுறை: ப. சிதம்பரம் விமர்சனம்
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் மோடி அரசிற்கு எதிராக டுவிட்டர் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஐயா மோடி அவர்களே,
எங்கள் குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?
இந்தக் கேள்வியைக் கேட்டு போஸ்டர் ஒட்டியதாக குற்றம் சாட்டி 24 பேரை டில்லி போலீஸ் கைது செய்தார்கள்


ஆடுவோமே, பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
பாடுவோமே!
இரண்டாம் அலையின் போது அரசின் அணுகுமுறை உண்மைகளை மறுப்பது மற்றும் மறைப்பது, பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்வது தாம். விளைவு: பெருங் குழப்பம்.
பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவதற்கு I.C.E. என்ற மும்முனை அணுகுமுறை வேண்டும், அது அரசிடம் இல்லை. முதல் அலையின்போது சுயவிளம்பரமும் வெற்றிக்களிப்புமே இருத்தன.
மூன்றாம் அலை, நான்காம் அலை வந்தால் அவற்றைச் சந்திப்பதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது

இரண்டாவது அலை தொடங்கியபோது இதுவும் முதல் அலைபோன்று மெதுவாக உயர்ந்து, சமநிலைக்கு வந்து, பிறகு ஓய்ந்துவிடும் என்று அரசு கருதியது. ஆகவே, இரண்டாம் அலையின் வேக உயர்வுக்கும் பரவலுக்கும் அரசிடம் எந்தத் திட்டமுமில்லை.

எதிர்கால தேவைகளுக்கு- ஆக்ஸிஜன், வென்டிலேடர், தடுப்பூசிகள், வாகனங்கள்- திட்டமிடவில்லை. தேவையான செவிலிகளை வேலையமர்த்த எந்தத் திட்டமும் இல்லை.

தடுப்பூசி போட்டதின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏப்ரல் 2-ம் நாள் 42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் ஏப்ரல் மாத நாள் சராசரி 30 லட்சமே. மே மாதத்தில் இதுவரை நாள் சராசரி 18 இலட்சம்தான். தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது.

முதல் அலை ஓய்ந்தபோது பரிசோதனைகள் தொய்வடைந்தன. பரிசோதனை மாதிரிகள் குறையும்போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும்தானே? வெயில் அடித்தபோது கூறையை செப்பனி செய்யவில்லையென்றால், அட மழை பெய்யும் போது கூறை ஒழுகும் தானே?

கொரோனா முதல் அலையின்போது உருவாக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டமைப்புகள் அக்டோபர் 2020-க்குப் பிறகு பராமரிக்கப்படவில்லை. இரண்டாவது அலை தொடங்கியபோது எஞ்சியிருந்த கட்டமைப்புகள் போதுமானவை அல்ல என்பது அம்பலமாகியது.

அதிசயம் ஆனால் உண்மை. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை
நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்க மத்திய அரசு போடத் தவறியது

மூன்றாவது தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக்) 12-04-2021 அன்றுதான் பயன்பாட்டு அனுமதி தரப்பட்டது. வேறு எந்தத் தடுப்பூசிக்கும் இதுவரை பயன்பாட்டு அனுமதி தரப்படவில்லை, இறக்குமதியும் ஆகவில்லை.

பைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்காமல் இழுத்தடித்தார்கள். ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு 12-4-2021 அன்றுதான் அனுமதி கொடுத்தார்கள். வேறு வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை. இந்தியாவுக்கு அவை எப்படிக் கிடைக்கும்?   இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக