சனி, 8 மே, 2021

தமிழக மீனவர்களின் உடையில் (T-Shirt) புலிப்படம் .. இலங்கை கடற்படை விசாரணை!

Gallery
bctamil.com :இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்தபின்னர் அவர்களை விடுவித்திருந்தனர்.
தற்போது, எடுக்கப்பட்ட காணொளி, ஒளிப்படங்களை அடிப்படையாகக் கொண்டு கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக