ஞாயிறு, 23 மே, 2021

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம்

selvaperunthagai-becomes-tn-assembly-congress-leader

hindutamil.in : நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ-க்களைப் பெற்றது. எனினும், சட்டமன்றக்குழுத் தலைவரைத் தேர்வு செய்ய முடியாமல் திணறியது.
அதிமுக., பாமக., பாஜக., கம்யூனிஸ்ட், மதிமுக., விசிக என அத்தனைக் கட்சிகளிலும் சட்டமன்றக்குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் முடிவெடுத்து அறிவித்தாகிவிட்டது.
காங்கிரஸ் கட்சியில் மட்டுமே இழுபறி நீடித்தது. முதன்முறை நடைபெற்ற எம்எம்ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து, கடந்த மே 17-ம் தேதி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி எம்.பி வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அன்று, கிட்டத்தட்ட அறிவிப்பு வெளியாகும் சூழல் நிலவியது. ஆனால், திடீரென அதுவும் ரத்தானது.



இந்நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஒப்புதலோடு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்களும், துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் " எனத் தெரிவித்திருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக