வியாழன், 6 மே, 2021

ஒளிப்பதிவு மேதை எஸ். மாருதிராவ் ! எதுவுமே இல்லாத போது, எல்லாவற்றையும் நிகழ்த்திக் காட்டினார்…

May be an image of 1 person, standing and indoor
S. Maruti Rao - WikipediaSukumar Shan : ஒளிப்பதிவு மேதை எஸ். மாருதிராவ் ! “எதுவுமே இல்லாத போது, எல்லாவற்றையும் அப்பா நிகழ்த்திக் காட்டினார்…”
ஒளிப்பதிவாளார் மாருதி ராவின் சாதனைகளை பட்டியலிடுகிறார் அவரது மகன். வாலி படத்தில்,  ஒரு அஜீத்தின் தோள் மீது, இன்னொரு அஜீத் அமர்ந்து சகோதர பாசத்தைக் காட்டினார். ஒரு சரத்குமாரின்கண்ணீரை, இன்னொருசரத்குமார் ஐயா படத்தில் துடைத்தார்.
ஒரு பிரசாந்த், இன்னொரு பிரசாந்த்தை ஜீன்ஸ் படத்தில்கட்டியணைத்தார்.
இந்தக் காட்சிகளை எல்லாம் நாம்மெய்மறந்து ரசித்தோம். வளர்ந்திருக்கும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிஇது போல் எண்ணற்ற சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது.
ஆனால், ஒரு சிவாஜி கணேசனுக்கு நேர் பின்னால், பத்தடி தூரத்திலிருந்து இன்னொரு சிவாஜி கணேசன் நடந்து வருவதும்,
அமர்ந்திருக்கும் முந்தைய சிவாஜி கணேசனை இந்த சிவாஜி கணேசன் தன் கைகளால் நெறிப்பதும் உத்தம்புத்திரன் படத்தில் எப்படிசாத்தியமாயிற்று?
குழந்தையும் தெய்வமும் படத்தில், ஒரு குட்டி பத்மினிக்கு, இன்னொரு குட்டி பத்மினி முத்தமிட்ட போது, முதல்குட்டி பத்மினியின் கன்னத்தில் எப்படி குழிவிழுந்தது.?
பானுமதி ரயிலில் செல்லும் போது, மனசாட்சியாக இன்னொரு பானுமதிஎதிரே வந்து அன்னை படத்தில் பாடுகிறார்,
பாடல் முடிவில்முதல் பானுமதி, தன் கைகளால் மனசாட்சி பானுமதியை அழித்தது எப்படி? பள்ளி நாட்களிலிருந்தே அப்பாவுக்கு கேமரா மீது தீராக் காதல். சக மாணவர்களையும், சகோதர, சகோதரிகளையும், தனக்குகிடைத்த கேமரா மூலம்படமெடுத்து மகிழ்விப்பார்.
பள்ளியும், மற்ற பிற அமைப்புகளும் நடத்திய புகைப்படப் போட்டிகளில்பங்கேற்று பரிசும் வாங்கியிருக்கிறார்.
அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்தவர், பத்திரிக்கை ஒன்றில் ஆசிரியராக இருந்தவர். அவர்மூலமாக அடையாரில் இருந்த கார்த்திகா பிலிம்ஸ்நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராக சேர்ந்தார்.
அவர்கள் தயாரித்த சூடாமணிஎன்ற தெலுங்குத் திரைப்படத்தில் உதவியாளராகப் பணியாற்றினர்.
அடுத்தது கவி காளமேகம் படத்தில் ஒளிப்பதிவாளர் எல்லிஸ்ஆர். டங்கனுக்கு சீடரானார்.
காரைக்குடியில் ஏவிஎம் செட்டியாருடைய பிரகதி ஸ்டுடியோ சார்பாக ஸ்ரீவள்ளி என்ற கன்னடப் படம் தயாரானது.
அதற்கு அப்பா ஸ்டில் படங்கள் எடுத்தார். ஒரு ஜெர்மன் ஒளிப்பதிவாளர் கேமராவைக் கையாண்டார். ஆனால், பாதியில் அந்த ஜெர்மன்காரர், தன் ஊரைப் பார்த்துப் போய்விடவே,நிறுவனம் திகைத்தது.
உடனே அப்படத்தின் இயக்குநரான ராகவேந்திர ராவ் அப்பாவிடம் அந்தப்பணியைத் தொடரச் சொல்லி பொறுப்பளித்தார்.அப்பா,
அந்த ஜெர்மன்காரருக்குப் பெரிய பெருமை தேடித்தரும் வகையில்படத்தை ஒளிப்பதிவு செய்து, தன் திறமையையும் நிரூபித்தார்.
ஏவிஎம்சென்னைக்குத் குடிபெயர்ந்த போது இரண்டாவது கேமராயூனிட்டில் அப்பா, கேமராமேனாக பணி உயர்வு பெற்றார்.  
இங்கே அவர்களது முதல் படம்ஓர் இரவு. அப்பாவின் கேமராகைவண்ணத்தைக் கண்டு வியந்த பட இயக்குநர் கே ராம்நாத் – நான் விட்டதையெல்லாம் பிடிச்சு, பலகாட்சிகளைநிறைவாக்கிவிட்டாயே, பலே.. –என்று பாராட்டினாராம்.
அடுத்து, பராசக்தி நடிகர்கள் தேர்வுக்காக மேக் அப் டெஸ்ட் நடைப்பெற்றது. சிவாஜி கணேசனுக்கு மேக் அப் செய்து பலகோணங்களில் அவரைப்படங்கள் எடுத்து, இவர் கதாநாயக வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று அப்பா ஏவிஎம்செட்டியாருக்குத் தன் முடிவைத் தெரிவித்தார்.செட்டியாருக்கு அரை மனசு, தம்பி தேறுவானா என்ற சந்தேகம். ஆனால் அப்பா, ‘இவரது கண்கள் ஒன்றே போதும், எந்த உணர்வையும்கண்களாலேயே வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் இவரிடம் இருக்கிறது. பளிச்பளிச் சென்று மாறும் முகபாவம், கணீரென்ற குரல்,
பிசிறில்லாத வசன உச்சரிப்பு எல்லாமே அபாரம்’ என்று அடித்துச் சொன்னார். தயக்கத்துடன் அதை ஏற்றுக் கொண்டார் செட்டியார்.பிறகுபராசக்தியின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்த செட்டியார், அப்பாவிடம் நல்ல தேர்வு என்று சொல்லிப் பாராட்டினார்.
அந்தப் படத்தில் ‘பொருளே இல்லார்க்கு….’ என்றொரு பாடல் இடம் பெற்றிருக்கும். இரவுச் சூழல், சோகமான அந்தப் பாட்டுக்குப் பனிமூட்டமானபின்னணி பொருத்தமாக இருக்கும் என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்கிறது. அதை இயக்குநரும் ஏற்றுக் கொள்ள,உடனே நியுஜால் என்ற ஒருரசாயனப் பொருளை வரவழைத்தார் அப்பா. அது பாரபின் என்ற வேதியல் பொருளின் திரவ நிலை. அதைஅப்படியே செட்டினுள் மேலே, கீழே,பக்கவாட்டில் என்று தெளித்துவிட்டு கேமராவை முடுக்கினார். அந்தப் பனிமூட்டப் பின்புலம்,பாடலின் சோகத்தை மேலும் வலுவாக்கியது,பாராட்டுகளும் குவிந்தன. அன்பே வா படத்தில், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…என்ற பாடல் காட்சியில் எம் ஜி ஆரும், சரோஜாதேவியும் ராஜ உடையில்,குதிரைகள்இழுக்கும் தேரில் பாடிக் கொண்டே செல்வார்கள். இருவருக்கும் ஆடம்பரமான உடையலங்காரம். இந்தக் காட்சிக்குப்பின்னணியும் இதே போல ரிச்ஆக இருப்பது தான் சரி என்று முடிவெடுத்தார் அப்பா. ராஜா ராணி, கனவுக் காட்சி… அவர்கள்விண்ணில், பால்வெளியில் பறந்தால், பொருத்தமாகஇருக்கும் என்று தீர்மானித்தார். உடனே அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்றுஅமெரிக்கா தூதரகத்தில் இருந்த நூல் நிலையத்துக்கு சென்றுவிண்வெளி சம்பந்தப்பட்ட படங்கள் அடங்கிய புத்தகங்களைப் பார்வையிட்டார். நூல் நிலைய அதிகாரியின் அனுமதியுடன் அந்தப் படங்களை, தன்கேமராவில் காப்பி செய்து கொண்டார். அதைபேக் ப்ரொஜக்ஷனாக ஓட விட்டு, அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார். இந்தக் காட்சிபடமாக்கப்படும் போது, அந்தவிண்வெளிக் காட்சியால் ஈர்க்கப்பட்ட எம் ஜி ஆர், ரொம்ப அற்புதமா இருக்கு, முதல்ல இந்தப் பின்னணிக் காட்சியைமுழுசாபார்த்துட்டு, அப்புறமா நான் நடிக்கிறேன் என்று சொன்னாராம்.
அதே கண்கள் வண்ணத் திரைப்படம்தான். ஆனால் அது ஒரு மர்மப் படம் என்பதால் பெரும்பாலான திக், திக் காட்சிகளை கருப்பு –வெள்ளைதோரணையில் ஒளிப்பதிவு செய்து, படம் பார்ப்பவர்கள் மனதில் அதிக திகிலை ஊட்டினார். மொத்தத்தில் ஒளியைத் தன்வசப்படுத்தியவர் என்றேஅப்பாவை சொல்லலாம். நடிகர்களின் சரும நிறத்துக்கு ஏற்ப ஒளியை அமைத்து அதனாலேயே தனிச்சிறப்பு பெற்றார். உதாரணத்துக்கு அம்மைத் தழும்புகள் கொண்ட நடிகர் நாகேஷைச் சொல்லலாம். சர்வர் சுந்தரம் படத்தில்நாகேஷும், கே. ஆர். விஜயாவும் பேசிக் கொள்ளும் காட்சியில்இருவரையும் தனித் தனியாக க்ளோஸ் அப்பில் காட்டும் போதும் சரி,மிட் ஷாட்டில் இருவரையும் ஒன்றாகக் காட்டும்போதும் சரி, இருவர் மீதானஒளியும், அவரவர் சரும நிறத்துக்கு தகுந்தாற்போல்அமைக்கப்பட்டிருக்கும். கே பாலசந்தர், மேஜர் சந்திரகாந்த் படத்தை இயக்க முற்பட்டபோதுஒளிப்பதிவுக்கு அப்போது பிரபலமாகஇருந்த நிமாய் கோஷை அணுகியிருக்கிறார். உடனே நிமாய் கோஷ், ’உங்க ஊர்லேயே மாருதிராவ்இருக்காரே, அந்ததிறமைசாலியைப் பயன்படுத்திக்கோங்க.’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அப்பா அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவுசெய்தபோதுஅவரது வித்தியாசமான கோணத்தையும், சிந்தனையையும் பார்த்துப் பிரமித்தார் கே.பி. அப்பாவும், கவிஞர் வாலியும் சேர்ந்துவடமாலை என்ற படத்தைதயாரித்து இயக்கினார்கள். அந்நாளைய ஸ்ரீ்காந்த் நடித்த வண்ணப் படம். அந்தப் படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில்நஷ்டமில்லை என்பதுதான் உண்மை. இதுபோக, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ்கமிஷனிலும், மத்திய அரசின் பிலிம் டிவிஷனுக்காக அகில இந்தியஅளவில் ஒளிப்பதிவாளர் தேர்வு குழுவிலும் அங்கம்வகித்திருக்கிறார். சென்னை திரைப்படக் கல்லூரியில் அப்பா விரிவுரையாளராகப் பாடம்எடுத்திருக்கிறார். அவரது மாணவர்களில்தங்கர் பச்சான், பி.சி.ஸ்ரீ்ராம் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். அந்தக் கல்லூரியில் வெறும் பாடம் மட்டும்அவர் நடத்தவில்லை,அப்போதைக்கப்போது முன்னேறி வரும் திரைப்படத் தொழில் நுணுக்கத்தைத் தானும் ஒரு மாணவராகக்கற்றுத்தேர்ந்திருக்கிறார். அதனால்தான் பிரிட்டிஷ் ராயல் போட்டோகிராபர் சொஸைட்டியில், பிரிட்டிஷ் அரசியாரின் அங்கீகாரம்பெற்ற உறுப்பினராகஅவருக்குக் கவுரவம் கிடைத்தது.. என்று தன் தந்தையின் சாதனைகளை சுருக்கமாக சொல்லி முடித்தார்டாக்டர் மகேந்திரன்.
இப்படிப்பட்ட ஜாம்பவன்களின் தோளில் அமர்ந்தபடிதான் இன்றைய ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்து வருகிறார்கள் என்பதைஉணரும் போதுபெருமையாகத்தான் இருக்கிறது. தென் இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் வெளியிட்ட சஞ்சிகையில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக