வெள்ளி, 7 மே, 2021

எதிர்க்கட்சி தலைவர் பதவி: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., போட்டி

latest tamil news
dinamalar.com : சென்னை : சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில், ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., இடையே, போட்டி நிலவுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், 66 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக, ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., ஆகிய இருவரும் விரும்புவதாக, தகவல் வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக, இ.பி.எஸ்., தேர்வு செய்யப்படுவார் என, அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி, 'அனுபவம் மிக்கவர் என்பதால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, ஓ.பி.எஸ்., தேர்வாக வாய்ப்புள்ளது' என, கூறியுள்ளார். இருவரில் விட்டுக் கொடுக்கப் போவது யார்; எம்.எல்.ஏ.,க்கள் யாரை தேர்வு செய்ய உள்ளனர் என்பது, இன்று மாலை தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக