செவ்வாய், 4 மே, 2021

கொரோனா தொற்று பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்- ஸ்டாலின் அறிக்கை

சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்றும்படி கோரி அந்த உணவகத்தின் மீது தாக்குதல் இதில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை 2-3 மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று சூறையாடும் காட்சிகள் இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கையில் தி.மு.க. தலைவரின் படத்தை வைத்திருந்ததால், இதில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர் என உறுதிசெய்யப்பட்டது .இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக திமுக அறிவித்துள்ளது. maalaimalar : சென்னை: தமிழ்நாட்டில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 952 பேரை நோய் தொற்றி உள்ளது. 122 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே சென்னை நகரம்தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டுமே நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் இறந்துள்ளனர் இந்த நிலையில்  திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 
கொரோனா தொற்று பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம். தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாக கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் அனைத்தும், மக்கள் நண்மைக்காக போடப்படுபவைதான் என்பதை மக்களே உணர்கிறார்கள். 
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவும் சங்கிலியை துண்டிக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது. அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக்கொள்ளும் கட்டுப்பாடாக நினைக்க வேண்டும். 
கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இருப்பது வேகமான கொரோனா பரவலுக்கு காரணமாகி விடும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக