வெள்ளி, 28 மே, 2021

பத்ம சேஷாத்ரி .... பாலியல் சீண்டலுக்கு மேலும் 3 ஆசிரியர்கள் உடந்தை?.. விசாரணையில்

 Vishnupriya R -  /tamil.oneindia.co :   சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் கைதான பத்ம சேஷாத்ரி ராஜகோபாலனுடன் மேலும் 3 ஆசிரியர்களுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே கே நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக இருந்த ராஜகோபாலன் (59) பல ஆண்டுகளாக அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் வந்தன
இந்த புகார்களை முதலில் மறுத்த ராஜகோபாலன், பின்னர் மாணவிகளுக்கு அவர் அனுப்பிய மெசேஜ் ஆதாரங்களை காட்டியவுடன் தான் செய்ததை ராஜகோபாலன் ஒப்புக்கொண்டார்.
விசாரணை தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியரின் பாலியல் புகார் குறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.



மாணவிகளிடம் விசாரணை சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. மாணவிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் கீதாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

3 ஆசிரியர்கள் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு உடந்தையாக 3 ஆசிரியர்கள் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாராம். எனவே அவர்கள் 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ராஜகோபாலன் மீது 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்

கோரிக்கை இதனால் பத்ம சேஷாத்ரி பள்ளியில் உள்ள கருப்பு ஆடுகள் சிக்கும் என்றே தெரிகிறது. இந்தப் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரால் அந்த பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக