செவ்வாய், 18 மே, 2021

இலங்கை முன்னாள் எம்பி துரைரட்ணசிங்கம் காலமானார் கிழக்கு மாகாணத்தில் 3000 பேருக்கு தொற்று ..

முன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி துறைரட்ணசிங்கம் உயிரிழப்பு | Tamil  News

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் காலமானதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

 கொரோனாவின் 3ஆவது அலையின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3,000ஐ அண்மித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் 1,000 தை தொடும் நிலையில் உயர்வடைந்துள்ளமை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரத் தகவல்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 941ஆக அதிகரித்துள்ளதுடன், கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்வடைந்துள்ளது.


அம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், பொலிஸார் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்பில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 86ஆக உயர்வடைந்துள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் 23ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக