வியாழன், 13 மே, 2021

இஸ்ரேல் பலஸ்தீன் - 14 குழந்தைகள் உட்பட 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளன

Karthikeyan Fastura :   ஜெருசலேமில் மேற்குக் கரையை ஒட்டியுள்ள பகுதியிலிருந்து திடீரென்று பாலஸ்தீனியர்களை வெளியேற கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள் இஸ்ரேலிய ராணுவத்தினர்.
அதற்குக் காரணம் அந்த நிலத்தின் உரிமையாளர் ஒரு இஸ்ரேலியர்.
பன்னெடுங்காலமாக அந்த இடத்திலிருந்து பாலஸ்தீனியர்கள் திடுதிப்பென்று வெளியேறுங்கள் என்ற இராணுவ நடவடிக்கையால் பொறுக்கமுடியாமல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
அவர்களுக்கு ஆதரவாக மேற்குக் கரையில் மேலும் பாலஸ்தீனியர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபடவே, ரொம்ப காலமாக அமைதியாக இருந்த ஹமாஸ் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாக தெரிகிறது. இதுதான் சாக்கு என்று இஸ்ரேலிய ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதனால் 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 14 குழந்தைகளும் அடங்குவர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொரோனா கூட குழந்தைகளை கொல்வதில்லை. மனிதர்களுக்குத் தான் அந்த வித்தியாசம் தெரிவதில்லை.
இஸ்ரேலிய ராணுவம் தங்கள் தரப்பில் ஆறு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1500க்கும் மேற்பட்ட ராக்கெட் தங்கள் மீது வீச பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதைப் படிக்கும் நமக்கே புரிகிறது பாலஸ்தீனியர்களை விட இஸ்ரேலியத் தரப்பில் தான் பிரச்சனை உள்ளது என்பது.
ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ-பிடன் இஸ்ரேலிய தரப்பிற்கு தான் ஆதரவு அளித்துள்ளார்.
அவர்கள் தங்களை காத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது என்று கூறியுள்ளார். இது இஸ்ரேலிய இராணுவத்திற்கு தட்டிக் கொடுத்தது போல உற்சாகமாக இன்னும் அதிகமாக தாக்குவார்கள்.
கொரோனா உச்சத்தில் இருக்கும்போது நமக்கு இது தேவைதானா என்று கேட்பீர்கள் என்றால் தேவை தான் என்பேன்.
எங்கோ ஓரிடத்தில் ஒரு அநியாயம் நடக்கும்போது நியாயத்திற்காக நாம் குரல் கொடுக்கும் போது தான் நமக்கும் அது போன்ற ஒரு சூழல் எதிர்காலத்தில் நிகழும்போது நமக்கான நியாயத்திற்காக உலகெங்கும் குரல்கள் எழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக