சனி, 24 ஏப்ரல், 2021

NEP மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மீண்டும் வேலையைக் காட்டிய மோடி அரசு!

May be an image of outdoors and text that says 'NEWS AMK JUSTIN புறக்கணிக்கப்பட்ட தமிழ்! புதிய கல்விக் கொள்கையை கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டது மத்திய அரசு; தமிழ் மொழி இடம்பெறவில்லை! 24 APRIL 2021 191 071 08R'

kalaignarseithigal.com - Vignesh Selvaraj : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் மீதும், தமிழர்களின் மீதும் விரோதப் போக்கை கையாண்டு வருகிறது. அதற்கு இன்னொரு சாட்சியாக, தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. வரைவை வெளியிட்ட மத்திய அரசு அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு வெளியிடப்பட்ட நிலையில் மாநில மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை மாநில மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, காஷ்மீரி, கொங்கணி, மணிப்புரி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிமாற்றம் செய்து உள்ளூர் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக