சனி, 10 ஏப்ரல், 2021

JEE, NEET நிறுவனத்தை 3500 கோடிக்கு வாங்கிய பிளாக்ஸ்டோன் கம்பனி 7300 கோடிக்கு விற்றுள்ளது! கொள்ளை அடிக்க கம்பனிகள் மற்றும் மத்திய மாநில அரசுகள்

May be an image of text
RS Prabu : கடந்த 2020 நவம்பரில் JEE, NEET தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆகாஷ் நிறுவனத்தை பிளாக்ஸ்டோன் என்கிற தனியார் முதலீட்டு நிறுவனம் சுமார் 3500 கோடிக்கு வாங்கியது.
இந்த மாதம் ஆகாஷ் டியூஷன் சென்டரை Byju's நிறுவனம் சுமார் 7300 கோடிக்கு வாங்கியிருக்கிறது.  கிட்டத்தட்ட 100% இலாபத்தை வெறும் ஒன்றரை வருடத்தில் பார்த்திருக்கிறது Blackstone.
கலை, அறிவியல் கல்லூரிகள் உட்பட இந்தியாவில் கல்லூரிப்படிப்பு என்று யார் வந்தாலும் நீட் என்கிற கொடூர நுழைவுத்தேர்வு சிஸ்டத்துக்கு தட்சணை கொடுத்துவிட்டுத்தான் படிக்க வர வேண்டும் என்பதை ஒரு சிறிய கும்பல் தீர்மானிக்கிறது.
நாமக்கல்லில் ஒரு மாணாக்கருக்கு நீட் பயற்சி கட்டணம் சுமார் ஒரு இலட்ச ரூபாய் வாங்குகிறார்கள். பள்ளி, விடுதிக் கட்டணம் தனி. ஒரு பள்ளிக்கு 2000 மாணாக்கர்கள் +2 எழுதுகிறார்கள்.
அதில் 1500 பேர் தவணை முறையில் பணம் காட்டினாலும் ஒரு பள்ளிக்கு தோராயமாக 15 கோடி ரூபாய் நீட் டியூஷன் கட்டணம் வசூலாகிறது.
அங்குள்ள பதினைந்து பிரபலமான பள்ளிகளில் வசூலாகும் ஒரு வருட தொகை மட்டுமே சுமார் 150 கோடி ரூபாய்.
தமிழ்நாடு முழுவதும் எத்தனை பள்ளிகள்?எத்தனை ஆயிரம் கோடி நீட் தேர்வு பயிற்சி என்ற பெயரில் வசூலாகும்?
நீட் தேர்வு என்பது சமூக அநீதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக