சனி, 24 ஏப்ரல், 2021

இந்தியாவுக்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு

  malaimalar  :இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தங்களுக்குத் தெரியும் என சீனா தெரிவித்துள்ளது. ிஜீங்: இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி விட்டது.கொரோனாவால் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிறார்கள்.அமெரிக்காவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த மனித இனத்திற்கே பொதுவான எதிரியாக உருவெடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராட சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.

இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் மருந்து பொருட்களுக்கு தற்காலிகமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவுக்கு தேவையான ஆதரவையும், உதவிகளையும் வழங்க சீனா தயாராக உள்ளது. இது கொரோனாவை கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக