செவ்வாய், 27 ஏப்ரல், 2021

உத்தர பிரதேசதில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையாம்! முதல்வர் யோகியின் பச்சை பொய்! விளாசிய பிரியங்கா காந்தி!

 Vishnupriya R - tamil.oneindia.com : லக்னோ: உணர்வற்ற அரசுதான் இது போன்ற அறிக்கையை அளிக்கும் என உத்தரப்பிரதேச அரசு மீது பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது.
அந்த மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் இதுவரை 10.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரை 7 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில் தற்போது 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஹரீத்வார் கும்பமேளாவில் பலர் பங்கேற்றதால் இங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.


ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மேலும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ எந்த கொரோனா வார்டு கொண்ட மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை என தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் மேலும் இது போல் அரசு மீது தவறாக தகவல் பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்

உத்தரப்பிரதேசம் இதுகுறித்து பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது நாளிதழ் செய்திகளை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்கிறாரே யோகி, அவர் அது போல் ஆக்ஸிஜன் இல்லாததால் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படும் நோயாளிகள் இருக்கும் இடங்களுக்கு சென்று பார்க்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்


நோயாளிகள் ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது. நோயாளிகளை இங்கிருந்து கொண்டு செல்லுங்கள் என மருத்துவமனைகள் கூறுகின்றன. கொரோனா பெருந்தொற்றின் போது மக்களிடம் இப்படி பொய் சொல்வதற்கு என்ன மாதிரியான தண்டனை யோகிக்கு கொடுக்கப்பட வேண்டும்? உணர்வில்லாத அரசு இது போன்ற அறிக்கையை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

இது போல் மற்றொரு ட்வீட்டில் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமானாலும் எனது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமானாலும் அதை செய்து கொள்ளுங்கள். ஆனால் நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து கீழிறங்கி வந்து மக்களின் உயிரை உடனடியாக காப்பாற்றுங்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக