செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி வேண்டி நாடக கலைஞர்கள் மனு

 dhinamalar :திருவள்ளூர் - திருவள்ளூர் மாவட்ட நாடகக்கலைஞர்கள், கலை நிகழ்ச்சி அனுமதிக்கக் கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.             திருவள்ளூர் மாவட்ட நாடகக்கலைஞர்கள் சங்கத்தினர், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையில், நாங்கள் முறையாக பதிவு பெற்று, கலை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.தற்போது, தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலை தொடர்ந்து, மீண்டும் தமிழக அரசு, மதம் மற்றும் திருவிழா கூட்டங்களுக்கு தடை விதித்து உள்ளது.                          இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது, கிராமிய கலைஞர்கள் தான். தினம், தினம் கிடைக்கும் ஊதியத்தை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தும் எங்களின் இந்த நிலையை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உணர்ந்து, சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக