வியாழன், 15 ஏப்ரல், 2021

திராவிடம் எங்குவரை இருக்கு!? பார்பனீயத்தின் அகண்ட பாரதத்தையும் தாண்டியிருக்கு!

The Legacy Of The Dravidian Stalwarts Periyar, Annadurai And Karunanidhi
Suresh Kumar Sundaram : நமக்கு சுய தம்பட்டம் அதிகம் ... தமிழ் பேர்ரசுகள் ஏன் வீழ்ந்தது என்று ஒருத்தரும் பேசமாட்டார்கள்... சங்க இலக்கியத்தில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கிறதா என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்... பதிலுக்கு சங்க இலக்கியத்தில் ‘இட்லி’ என்ற வார்த்தை இருக்கிறதா என்றேன்!வந்தேறி என்றார்கள்! அதுவும் ஒரு அவுஸ்திரேலிய சிங்கள தமிழ் ஒரவு..இத்தனை இலக்கியங்கள் , இருந்தும் கல்விக்காக இன்றும் போராட வேண்டியுள்ளது என்பது ‘திராவிடம்’ 100 ஆண்டுகளில் என்ன செய்தது என்பது கேட்கும் மூளையற்ற உறவுகளுக்கு தெரிய வருவதில்லை!
பார்பனீயம் அல்லது சனாதனம் என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இருக்கின்றதா? தமிழ் என்ற வார்த்தை திருகுறளில் இல்லை என்பதால் தமிழ் இல்லாமலா போச்சி?
சீமானை சென்னையில் ‘எச்சை’ என்பது போல் ‘ஈ’ 🪰 ஐ குமரி மாவட்டத்தில் ‘ஈச்ச’ என்பார்கள் ... அதற்காக எச்சை, ஈச்ச என்ற வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்று கேட்பார்களா!?
திராவிடம் சமஸ்கிரத சொல் என்பவனிடம் தேசியம் / தேசம் தமிழ் சொல்லா என்றால் தேயம் தோய்ந்து மருவி உருமாறி் தேசியமாகியது என்கிறார்கள்! தமிழ் மருவி திரமிளம்... திராவிடம் ஆகியது என்ற மொழியியல் வல்லுனர்களின் கருத்தை முன் வைத்தால் பிறகு ஏன் திராவிடர் கழகம் என்பதை தமிழர் கழகம் என்று மாற்றலை என்பார்கள் ... (நாமும் கேட்கலாம் தமிழ் தேயம் என்று நீங்கள் சொல்லாத்து ஏன்! 😂, )
முப்பாட்டனார் கோயிலில் , குலக்கோயிலில் தமிழில் பூசை செய்ய வக்கற்றவர்களின் திராவிடத்தை சங்க இலக்கியத்தில் தேடுறாங்களாம்... !
திராவிடம் - பார்பனீயத்தின் எதிர் சொல் , சுயமரியாதை , சமத்துவத்தின் ‘பிராண்டு’
வெல்க திராவிடம்!
திராவிடம் எங்குவரை இருக்கு!?
பார்பனீயத்தின் அகண்ட பாரதத்தையும் தாண்டியிருக்கு!
பார்பனீயம் எங்கு எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் திராவிடம் எதிர்த்து நிற்கும்!
இனி திராவிடம் , தமிழ்நாட்டையும் தாண்டி, இந்தியாவையும் தாண்டி செல்கின்ற ‘சுயமரியாதையின்’ மந்திரச்சொல் (பிராண்டு) திராவிடம்!
 
 
சங்க இலக்கியத்தில் ஏன் திராவிடம் என்ற வார்த்தை இல்லை புரோ!
அந்த காலத்தில் (காளப்பிரயர்கள் காலத்தில்) திராவிடர் (பார்பனர் அல்லோதோர்) இயக்கம் தேவை படலை புரோ! அன்று ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அரசர்களிடம் யாசகம் செய்து வாழ்ந்தார்கள்!
7-10ம் நூற்றாண்டிற்கு பிறகு அத்தனை அரசர்களும் ஆன்மீகவாதியாகி சைவம் வைணவம் என்று கத்திய
தூக்கி தங்களுக்குள் சண்டையிட்டு , செத்து போனார்கள்! பார்பனீயம் தலைவிரித்தாடியது புரோ!
சமண, பௌத்த்மத துறவிகளை கொன்று அவர்கள் கோயில்களில் சைவ , வைணவ சிலைகளை திணித்தார்கள்...10ம் நூற்றாண்டிற்கு முந்திய ஒரு சாமி்சிலையோ, பெரிய கோயில்களையோ காட்டுபார்போம் அல்லது அரிக்கா மேட்டிலோ ஒரு சாமி(எந்த சாமி என்றில்லை) காட்டுபார்ப்போம்!
எல்லா தமிழ் மன்னர்களும் மாறி மாறி பெண்ணுக்காக அடிச்சி செத்துப்போய் குற்றரசர்கள் ஆனார்கள்! ஒரு அரசனுக்கு ஒரு்மனைவி எனலறால் 100 ஆரிய வைஎப்பாட்டிகள் , எப்படி உருப்படும்! தமிழிலிருந்து பிரிந்து பல நூன்றாண்டுக்கு முன் வடக்கில் செட்டில் ஆன சமஸ்கிரத கலப்பு விஜயநகர பார்பனீய ஆட்சி ... இங்கு வருமளவுக்கு...
16 நூற்றாண்டு (ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு ,) மதிராஸ் பட்டினம் (தமிழ்நாடு , இன்றைய ஆந்திரா , கர்நாடகா, கேரளத்தின் சில பகுதிகள்) வெள்ளைக்காரன் கைக்கு போனது!
ஆங்கிலேயர்கள் கல்வி கொடுத்தான், சில வசதியான அந்தகால பார்பனர் அல்லாத சிலர் கல்வி பெற்றனர்!
19 நூற்றாண்டு தொடக்கம்... பார்பனர்கள் ஆதிக்கம் அதிகரித்தது! பார்பனர் அல்லாதவர்களுக்கு உயர் கல்வி கற்க பல வித தடைகள் இருந்தது (உதாரணம் ஆங்கிலத்தில் மருத்துவம் படிக்க சமஸ்கிரதம் கட்டாயம் என்றானது)
பிராமணர் அல்லாதாரை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் 1917 இல் ”திராவிடன்” இதழ் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விதழ் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறுபான்மையினராக இருந்த பிராமணர்கள் எல்லா நலன்களையும் அனுபவித்துக்கொண்டு திராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியது. சீர்திருத்தம், மொழிப்பற்று, வர்ணாசிரமதர்ம எதிர்ப்பு போன்ற பல நிலைகளில் செயல்பட்டது. மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, வெ. ப. சுப்பிரமணிய முதலியார், எஸ்.எஸ். அருணகிரிநாதர், நாகை சொ. தண்டபாணிப்பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற பலர் இவ்விதழில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
சுருக்க வரலாறு...
நீதி கட்சியானது பார்பனர் அல்லாதோர் இயக்கம்!
- நீதி கட்சி ஆட்சியில் சமஸ்கிரதம் கட்டாயம் என்ற நிலை மாறியது... அண்ணாமலை பல்கலைகழகம் தோன்றியது...
திராவிடம் என்பது பார்பனீயத்திற்கு எதிர்பதம் என்ற கருத்தியல் உருவாகி ...அதை ‘பிராண்டு’ ஆக்கி... பார்பனர்களின் பார்பனீயத்திற்கு எதிராக போர் முரசு இனலறும் கொட்டுகிறது
...
அப்படியே
பெரியார்
அண்ணா
கலைஞர்...
இப்படி ... சென்றது!
ஒரவுகள் இதை படித்த பிறகு ,
மீண்டும் கேட்பான் பாருங்கோ...
சங்க இலக்கியத்தில் ஏன் ‘திராவிடம்’ இல்லை என்று!
(இதே புரியாத ஒரவுகளுக்கு திராவிடம் என்ற சொல் அச்சிற்கு வருவதற்கு முன்பே இருந்தது , அது எப்படி திருந்தது , பாண்டிய மன்னர்களை தென்பகுதிய சேர்ந்தவர்கள் என்ற பல குறிப்புகளை சொன்னா , மொழியல் அறிஞர்களின் ஆய்வுபடி தமிழ், திரமிளம் திராவிடம் என்பதெல்லாம் சொன்னா புரியவா போகிறது? )
மீண்டும் கேட்பான் பாருங்கோ...
சங்க இலக்கியத்தில் ஏன் ‘திராவிடம்’ இல்லை என்று!
நக்கலா நாமும் கேட்கலாம்!
சங்க இலக்கியத்தில் ‘காப்பிக்கொட்டை’ இருக்கிறதா புரொ ஆனா இப்ப இருக்கிறதே!
சங்க இலக்கியத்தில் ‘தோமா’ இருந்தாரா ? ஆனா நிஜத்தில் இருந்தாரே!
சங்க இலக்கியத்தில் ‘கறி இட்லி’ இருக்கிறதா புரொ ஆனா இப்ப இருக்கிறதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக