ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

குஜராத்தில் சோமாலியாவை விட மோசமான மருத்துவத்துறை அம்புலன்ஸ்களில் இறக்கும் நோயாளிகள்

May be an image of one or more people, people standing, outdoors and text that says 'Ambulances were stuck in the queue for around three hours and patients had no choice but to remain inside the emergency vehicles Like Share'

John Justus : மோடியின் "குஜராத் மாடல்" இது தான்!   மோடி 3 முறை முதல்வராக இருந்த மாநிலம் தான் குஜராத். குஜராத் அரசு மருத்துவமனைகளின் வெளியே சிகிட்சைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள். குஜராத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான CT Scan, MRI Scan கருவிகளே இல்லை என கையை விரித்துள்ளனர். குஜராத் அரசு மருத்துவமனைகளில் மொத்தமே 16 CT Scan, 5 MRI Scan மிஷின்கள் தான் இருக்கின்றன. 20 மாவட்டங்களில் ஒரு CT Scan கூட இல்லை.
28 மாவட்டங்களில் ஒரு MRI Scan கூட இல்லை.
கடந்த 2 ஆண்டுகளில் 1 CT Scan மட்டுமே புதுசா வாங்கி இருக்கிறார்கள்.
இது தான் பாஜக ஆளும் மாநிலங்களின் நிலைமை.
இவனுக தான் வந்து நமக்கு பாடம் எடுக்குறானுக.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள
38 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு சராசரியாக 3 வீதம் என அரசு மருத்துவமனைகளில் மட்டும் மொத்தம் 100 க்கும் மேற்பட்ட CT scan கருவிகள் உள்ளன.
"தமிழ்நாட்டை இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாது, ஏனென்றால் தமிழ்நாடு வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக உள்ளது" என உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான அமிர்திய சென் அவர்கள் குறிப்பிட்டதை இப்போது நினைவுகூர வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டை இந்த அளவுக்கு முன்னேறிய மாநிலமாக மாற்றியது திராவிடக் கட்சிகள் தான். குறிப்பாக தலைவர் "கலைஞர்" தலைமையிலான திமுக ஆட்சியில் தான்.
ஆனால் இந்த வளர்ச்சியை எல்லாம் மறைத்துவிட்டு, வெறும் ஊழல், லஞ்சம் என்ற மொக்கை வாதங்களை கூறி தமிழ்நாட்டை குறை கூறுவது என்பதை பச்சை அயோக்கியத்தனமின்றி வேறில்லை.
தமிழ்நாட்டின் இந்த மருத்துவ சாம்ராஜ்யத்தை தகர்த்து, பாஜக ஆளும் மாநிலங்களை போல சுடுகாடாக மாற்ற தான் நீட் முதல் அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்து நம் மீது திணிக்கிறார்கள்.
பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக