Kathir RS மற்ற மாநிலங்களைப்பற்றித் தெரியவில்லை... ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை..
உங்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு அது பதிவுசெய்யப்பட்டவுடன் உங்களை அழைத்துசெல்வது நோயின் தீவிரத்தைப் பொறுத்து உங்களுக்கான சிகிச்சையை இறுதி செய்வது தேவைப்பட்டால் மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே இருக்கச் சொல்வது ஆகியன நடக்க குறைந்தது ஒரு நாள் ஆகும்.
தற்போதைய சூழ் நிலையில் கிங் இன்ஸ்டிட்யூட்டில் நீண்ட வரிசைகளில் 3 -4 மணி நேரம் கூட நோயாளிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இந்த முறையை எந்த வகையிலும் பை பாஸ் செய்ய இயலாது. அப்படி செய்ய முயல்வது நமக்கு நெருக்கமான அரசு அதிகாரிகள் மருத்துவர்களிடம் உதவி கேட்பது ஆகிய எதுவுமே இதில் பயன்படாது. அப்படி செய்வது இந்த சூழலில் சரியான அணுகுமுறையல்ல.
நமது அரசுகள் உருவாக்கிய கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் இருந்தால் நமக்கான சிகிச்சை நிச்சயம் கிடைக்கும்.கிடைக்கவில்லையெனினும் உரிமையுடன் கேட்டு சண்டையிட்டாவது பெற இயலும்.இப்படியான சூழல் ஒருவேளை உருவானால் நமது நண்பர்களிடம் உதவி கேட்கலாம்.
ஆனால் இந்த முறைகளில் அப்பொல்லோ ஆஸ்பத்திரி தரத்தை எதிர்பார்க்க இயலாது. சிறப்பு உபசரிப்புகள் ப்ரிவிலிஜ்கள் இவை பற்றிய சிந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு இது ஒரு பேரிடர் காலம் என்பதை உணர்ந்து அரசு வழங்கும் இந்த உதவியை பயன்படுத்திக் கொள்வது நமக்கும் நமது குடும்பத்துக்கும் நமது சமூகத்திற்கும் நல்லது. கதிர் ஆர்எஸ் 25/4/21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக