வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஜெயலலிதாவின் அண்ணா நூலக பயங்கரவாதமும் ஜெயவர்த்தனாவின் யாழ் நூலக பயங்கரவாதமும்

No photo description available.

தோழர் புலியூர் : ஒரு இனத்தை அழிக்க முற்படுபவர்கள் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிப்பார்கள். அப்படித்தான் இலங்கையில், யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது ஜெ ஆர் ஜெயவர்த்தன  அரசு.
அதேபோல், கலைஞர் கட்டிய 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை' பாழடையச் செய்தார் ஜெயலலிதா. குழந்தைகள் நல மருத்துவமனையாக இதை மாற்றப் போகிறேன் எனத் திமிராய்ப் பேசிய ஜெயாவை அடக்கிய நீதிமன்றம், நூலகம் தொடர வேண்டும் என்றது.

 178 கோடி செலவில் கட்டப்பட்ட, இந்தியாவின் பெரிய நூலகமான, தெற்காசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான, ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து படிக்கும் அளவிற்கு வசதிகள் கொண்ட மாபெரும் நூலகத்தை, நீதிமன்ற உத்தரவையும் மீறி திருமண நிகழ்விற்கு வாடகைக்கு விட்டார் பார்ப்பனத் திமிர் நிரம்பிய ஜெயலலிதா.
ஏராளமான போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான விலையுயர்ந்த நூல்கள் செல்லரித்துப் போயின.
50000 க்கும் மேற்பட்ட நூல்கள் திருடு போயிருக்கின்றன. நூலகப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாயையும் தன் போயஸ் தோட்டத்திற்குள் பதுக்கிக் கொண்டார் ஜெயா.


எல்லாவற்றையும் விடக் கொடுமை, கலைஞர் மட்டுமே இந்நூலகத்தில் உறுப்பினர் அட்டை பெற்ற ஒரே நபர்.
ஆட்சி மாறியதும் ஜெயலலிதா உறுப்பினர் சேர்க்கையைக் கூட நடத்த அனுமதிக்கவில்லை.
தமிழின் அடையாளமான இந்த மாபெரும் நூலகம் வருங்காலத்தில் மீண்டும் புதுப்பொலிவு பெற வேண்டும் என்பதே புத்தக தினத்தில் நம் அனைவரின் விருப்பமாக இருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக