செவ்வாய், 20 ஏப்ரல், 2021

இவர்கள் உண்மையாகவே திருந்தினால் இவர்கள் செய்யவேண்டியது பிராயச்சித்தம் தவிர அரசியல் அல்ல

 இவர்கள் சீமானின் செயற்கை அடுப்பில் குளிர் காய்ந்தார்கள்  இப்போது இது வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துகொண்டுள்ளார்கள் ஆனாலும் இப்போதும் இவர்களின் அறிவு வளர்ச்சி அடைந்ததாக எந்த அடையாளமும் இல்லை.
இவர்கள் சீமானை வைத்து தமிழ்நாட்டில் தங்களின் இழந்து போன இமேஜை பில்டப் பண்ணலாம் என்று கனவு கண்டார்கள் அதற்காக தமிழ்நாட்டின் எல்லா பெரிய காட்சிகளையும் அமைப்புக்களையும் கிள்ளுக்கீரையாக நடத்தினார்கள் தூற்றினார்கள்  இந்த அறிவாளிகளுக்கு தங்களின் கணக்கு பிழைத்த விட்டது என்பது இப்போதுதான் புரிந்திருக்கிறது  
இவர்களின் போன சாயம் இனி மீண்டுவராது எத்தனை நாளைக்குதான் தமிழ்நாட்டை ஏமாற்ற முடியும்?
இவர்களுக்கு எல்லா வசதிகளும் எல்லா விளம்பரங்களும் இன்னும் என்னன்னவோ எல்லாம் கொடுத்த்தார்கள் இவர்களின் அத்தனை சகோதர படுகொலைகளையும் ராஜீவ் காந்தி கொலை உட்பட சகித்து கொண்டார்கள் எப்படியாவது ஈழம் மீழட்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக எல்லாவற்றையும் தமிழகம் இழந்தது அதிலும் திமுக இழந்தது மிக மிக அதிகம்
ஆனால் நன்றி கெட்ட இவர்கள் ஆர் எஸ் எஸ் இன் கைப்பாவையாக மாறி அவர்களின் அத்தனை நிகழ்ச்சி நிரலையும் நிறைவேற்றினார்கள்
இப்போது முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ் பாஜக அடியாட்களாகவே மாறியும் விட்டார்கள்


இப்போது எல்லா பழியையும் சீமான் மீது மட்டும் போட்டுவிட்டு தாங்கள் நல்ல பிள்ளையாக காட்சி தரலாம் என்று கணக்கு போடுகிறார்கள்   அது முடியாது எப்போதும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது
இவர்கள் உண்மையாகவே திருந்தினால் இவர்கள் செய்யவேண்டியது பிராயச்சித்தம் தவிர அரசியல் அல்ல  
முதலில் கந்தன் கருணை துணுக்காய் வதைமுகாம் போன்ற சகோதர படுகொலைகளுக்கும் முக்கியமாக ராஜீவ் காந்தி கொலைக்கும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பை மனித குலத்திடம் கேட்கவும்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக