வெள்ளி, 9 ஏப்ரல், 2021

ப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்!

puthiyamugam.com : முன்னணி ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்களை சகட்டுமேனிக்கு, சில நேரங்களில் கொச்சையாகவும் பச்சையாகவும் விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன் என்ற பார்ட்டி. இவரின் வாயை அடைப்பதற்காகவே லம்பாக ஒரு அமெளண்டை திணிக்கும் தயாரிப்பாளர்களும் உண்டு. இதனாலேயே உண்டு, கொழுத்து வாழ்பவர் ப்ளூ சட்டை மாறன்.

அப்படிப்பட்ட அடாவடி விமர்சனப் பார்ட்டியான மாறன் கதை—திரைக்கதை எழுதி இசையும் அமைத்து (அடக் கொடுமையே இது வேறயா?) ‘ஆண்டி இந்தியன்’ என்ற படத்தை டைரக்ட் பண்ணி முடித்து சென்சாருக்கும் அனுப்பினார். படத்தின் ஒன்றிரண்டு காட்சிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த படத்தையுமே தடைபண்ணிவிட்டது சென்சார் போர்டு.

எப்போதுமே ஏடாகூடங்களையும் வில்லங்க சர்ச்சைகளையும் தேடி, விரும்பிப் போகும் தயாரிப்பாளர் ஆதம் பாவா, ப்ளூ சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்தையும் அண்டர்டேக் பண்ணினார். இப்படத்திற்கு சென்சார் பண்ணிய அடாவடியை எதிர்த்து மும்பை மறுதணிக்கைக்குச் செல்வோம் என ஆவேசமாகியுள்ளார் ஆதம் பாவா.

அது சரி ஆதம் பாவா, டைரக்டர் அமீரை ஹீரோவாகப் போட்டு, வி.இசட் துரை டைரக்ஷனில் நீங்க தயாரிச்ச ‘நாற்காலி’ படத்தை கடந்த மார்ச் மாசமே ரிலீஸ் பண்ணப் போறதா சொல்லி, அப்ப சி.எம்.மா இருந்த எடப்பாடி பழனிசாமியை வைத்து ஆடியோவெல்லாம் ரிலீஸ் பண்ணுனீகளே என்னாச்சு?

ஒரு வேளை மு.க.ஸ்டாலின் சி.எம்.மா பதவி ஏற்கும் வரை வெயிட் பண்றாரோ என்னவோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக