திங்கள், 12 ஏப்ரல், 2021

துரைமுருகன் எப்படி இருக்கிறார்?

துரைமுருகன் எப்படி இருக்கிறார்?
மின்னம்பலம் : தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், தேர்தல் களத்தில் பணியாற்றியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்குக் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை கவலைப்படும் அளவுக்கு இல்லை. இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  -பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக