விவேக் ஒரு நடிகன் என்று மட்டும் கடந்து போக முடியாத அளவு சமூக பொறுப்புடன் செயல்பட்டவர்!
முத்திரை குத்தப்படாத சமூக நீதி சுயமரியாதை பகுத்தறிவு கலைஞர்!
கட்சிகள் இயக்கங்கள் கோட்பாடுகளை தங்கள் அடையாளங்களாக வரித்து கொண்டவர்களை விட அதிகமாக மக்களிடையே அந்த கருத்துக்களை விதைத்து சென்றவர்.
மென்மையான நகைச்சுவையின் மேல் நின்று காரமான பெரியார் கருத்துக்களை முரசறைந்து முழங்கியவர்.
விவேக்கின் நகைச்சுவை காட்சிகளில் தவிர்க்கவே முடியாதவாறு சிந்தனையை தட்டி எழுப்பும் தீப்பொறிகள் பறக்கும் அது யாரையும் சுட்டுவிடாது
ஆனால் சுட்டி காட்டும்!
ஒரு நடிகனின் ஓவியத்தை வரைபவர்கள் பெரும்பாலும் கலையாத கேசம் அழகான மேக்கப் முகம் என்று வரைபவர்கள்
ஆனால் தோழர் ரவியோ இங்கே ஒரு சமூக போராளியின் தோற்றத்தில் அதுவும் அசப்பில் ஒரு ஜார்ஜ் பெர்னாண்டஸ் போலல்லவா வரைந்திருக்கிறார் தோழர் Ravi Palette
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக