சனி, 24 ஏப்ரல், 2021

கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது அரசு .. தமிழகத்தை மிரட்டும் கொரோனா..

May be an image of 1 person and text that says 'CORONA UPDATE SUN NEWS உலக சுகாதார அமைப்பு கருத்து! "கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று; இந்தியாவின் நிலை கவலை அளிக்கிறது!" 24APRIL2021 SUNNETAIL SUNNEWS sunnewslive.in'
maalaimalar : தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப் 26- ந்தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருக்கின்றன. சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.100%;"> *ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம்.
*ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்.
*கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.
*சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.
 *திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
*இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
*உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.
*உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

*மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

*திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்களை மூட உத்தரவு.

*மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி.

*கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு.

*26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக