LR Jagadheesan : தமிழ்நாட்டு அரசியலில் புரட்சிபாரதம் கட்சியின் நிறுவனர் பூவை ஜகனை தன் ஆதர்ஷமாக கொண்டாடும் பா ரஞ்சித்தும்,
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியனையும்,
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமியையும்,
தன் அரசியல் ஆதர்ஷமாக கொண்டாடும் மாரி செல்வராஜும் தான்,
உங்களின் ஆனப்பெரிய தமிழ்நாட்டு திரைத்துறை ஆதர்ஷங்கள் என்று கொண்டாடுவது உங்கள் உரிமை!. அதில் மற்றவர்கள் கேள்வி எழுப்ப ஒன்றும் இல்லை.
ஆனால் அவர்களை ஒருபக்கம் சினிமாவில் கொண்டாடிக்கொண்டே,
தமிழ்நாட்டு அரசியலில் ஜாதி ஒழிப்பு அல்லது ஜாதிகடந்த அரசியல் பற்றியெல்லாம் அடுத்தவர்களுக்கு வகுப்பெடுக்க முற்படாதீர்கள்.
உங்களைவிட அதிமுக கட்சியின் அடிமட்டத்தொண்டன் மேலதிகமாகவும் கூடுதலாகவும் ஜாதிகடந்த அல்லது ஜாதியை கடக்க முயலும் அரசியலுக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக