புதன், 28 ஏப்ரல், 2021

தமிழகத்தில் மருந்து, ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

May be an image of 3 people and text that says 'இந்திய கவர்மென்ட் இருக்கும் போது செஞ்சிலுவை சங்கத்துக்கிட்ட மக்களுக்கு உதவி பண்ண சொல்லி 10 மில்லியன் டாலர் குடுத்தா என்ன அர்த்தம் TOnLS @vinot hpoomuthu TAMI MEMSS + உன் மேல நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்'

nakkeeran : தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 16,665 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று  சென்னையில் ஒரே நாளில் 4,764 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,10,308 ஆக அதிகரித்துள்ளது.                  அதேபோல் 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 10,06,033 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மருந்து மற்றும் ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.           

         ஆக்சிஜன், மருந்துகள் இருப்பு, படுக்கை வசதிகள் குறித்து கண்காணிக்க பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,  ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க அனாமிகா ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.                மருந்து இருப்பை கண்காணிக்க கௌரவ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கரோனாவிற்கு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகளை குறித்து கண்காணிக்க கட்டா ரவிதேஜா, ஐஸ்வர்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக