திங்கள், 19 ஏப்ரல், 2021

சனாதானத்தை எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டு திமுகவை எதிர்ப்பதும்.. இவர்கள் எதை நிறுவ துடிக்கிறார்கள்?

தோழர்
ஸ்டாலின் : இவர்கள் எதை நிறுவ துடிக்கிறார்கள்?! சனாதானத்தை எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டு திமுகவை எதிர்ப்பதும், சாதியை எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டு ராமதாஸை எதிர்க்காமல் அண்ணன் திருமாவை எதிர்ப்பதும் இந்த ரஞ்சித்துகளை பார்த்தால் எனக்கு விந்தையாக உள்ளது. இவர்கள் எதை நிறுவ இவ்வளவு மெனக்கெடுகிறார்கள், ஒரு தலித் படித்தவனாக ஒரு தலைவனாக இருந்தாலும் அவன் ஆதிக்க சக்திகளால் தாக்கப்படுவான் என திரையில் காட்டிவிட்டு நிஜத்தில் திருமாவை தனித்து நிற்க்க செய்ய முயற்சி எடுப்பது வியப்பாக தானே இருக்கும்?!
திமுகவை நீர்த்துப்போக செய்துவிட்டு யாரை கொண்டு வந்து ? இவர்களின் அதிகாரத்தை பெறப்போகிறார்கள் ?
பாஜகவையா ? அல்லது மாயாவதியையா ?
ஒரு மாநிலத்தின் அதிகாரத்தை அடைந்த மாயாவதியால் தலைவர் கலைஞரை போல தலித்துகளுக்கு 18 சதவீதம் இடஒதுக்கீட்ட தர முடிந்ததா ?
அல்லது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தான் இயற்ற முடிந்ததா? அல்லது அனைவரும் சமம் என சமத்துவபுரமாவது கொண்டு வர முடிந்ததா ? இல்லையே !
ஆதரமற்ற பொய்களை அடுக்குகிறார்கள் . வரலாற்றை வருடங்கள் மூலமாக திரிக்கிறார்கள் . இதை தவறு என சுட்டிக்காட்டும் போது கேட்பவர்களும் சாதியாளனாக நிறுவப்படுகின்றனர் .
திமுகவை புறக்கணிப்பவர்கள் யாரை நிறுவ போகிறீர்கள் ? என சொல்லிவிட்டு புறக்கணியுங்கள் நானும் வருகிறேன். இவர்கள் எதை நிறுவ துடிக்கிறார்கள்?

 Ramkumar Babu : இவர்கள் சங்கிக்கும்பலின் ஒரு பிரிவு. திராவிடம் பெற்று தாராத ஒன்றை, சஸனாதனம் பெற்று தரும் என்று சொல்லும் கூட்டம். 2000 வருசமா தராத சஸனாதனம், இப்பொழுது தரும் என்று நம்மை நம்பச்சொல்லுது நீலச்சங்கி கூட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக