புதன், 7 ஏப்ரல், 2021

இனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழைக்கும்!

May be an image of 2 people

Kathir RS : எமர்ஜென்சியில் ஆட்சி கலைக்கப்பட்ட போதும்.. அத்தனை  தொண்டர்களும் தலைவர்களும் அடி பட்டு மிதி பட்ட போதும்...
1990ல் அநியாய குற்றச்சாட்டுகளால் ஆட்சி கலைக்கப்பட்ட போதும்..
திமுகவிற்கு  அனுதாப வாக்குகள் மருந்துக்குக் கூட கிடைக்கவில்லை.
அதே போல..1996-2001, 2006-2011 ல் நல்லாட்சி புரிந்த போதும் தமிழக மக்கள் திமுகவைப் பாராட்டி அடுத்தொரு வாய்ப்பை வழங்கவே இல்லை.
ஆனால்...
1980ல் ஆட்சிக் கலைப்பைச் சொல்லி அழுதும்..1984ல்  உடல் நலமில்லை என்று சொல்லியும் இந்திரா இறந்ததை வைத்து அழுது புலம்பியும்.. 1992 ராஜீவ் காந்தி இறந்தாரென்ற அனுதாப அலையிலும் அதிமுக வென்று கொண்டே இருந்தது.
ஒரு முறைகூட நல்லாட்சி என்ற பெயரை எடுக்காத அதிமுகவையே அதிகமான முறை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தனர்.
அதிமுக உருவான பின்னர் நடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் வெறும் மூன்று முறைதான் திமுக வென்றிருக்கிறது.
அதிமுக உருவான பின்பான இந்த 44 ஆண்டுகளில் திமுக வெறும் 12 ஆண்டுகளே தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறது.


இன்றும் அதிமுகதான் பெரிய கட்சி.
திமுவிற்கு இரண்டாம் இடம்தான்.
அந்த அனுதாபம் கூட திமுக மீது மக்களுக்கு கிடையாது. அன்றும் இன்றும் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட கட்சியாகவே திமுக தமிழக மக்களால் நடத்தப்படுகிறது.
ஆனால் அதற்கு என்ன காரணம்..!?
ஒரு நல்ல மகன் ஒரு மோசமான மகன் இவர்களில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவது மோசமான மகன் மீதுதான்.
அவனுக்கே அதிக சலுகைகள் வாய்ப்புகள் இவற்றை தந்து கொண்டே இருப்பார்கள்.
நல்ல மகன் நல்லவன் என்பதற்காகவே புறக்கணிக்கப்படுவான்.. ஒடுக்கப்படுவான்...ஏன் அவமானப்படுத்தக்கூட படுவான்.
தனக்கான நியாயத்தை அவன் எப்போதும் பேசவே முடியாது.அதே நேரம் சிறிய தவறு செய்தாலும் அவனை மொத்த குடும்பமும் ஒதுக்கும்..அதீத கோபத்தை அவன் மீது காட்டும். ஆனால் மோசமான மகன் என்ன தவறு செய்தாலும் அவனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே இருக்கும்.
தமிழ்நாட்டு மக்களும் திமுகவை அப்படித்தான் நடத்துகிறார்கள்.
இனியாவது இந்த நிலை மாற வேண்டும்.
மாறும் என நம்புகிறேன்.
கதிர் ஆர்எஸ்
6/4/21

Rajendra Selvaraj : மாறும்....அடாவடி அரசியலின் காலம் ஜெயலலிதாவோடு முடிந்தது....இனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழைக்கும்...திமுக தான் அதன் ஊற்றுக்கண்ணாக இருக்கும்...
Sundar Giri  : தப்பான மகனை தடவிக் கொடுத்துகொண்டே இருக்கனும்.கோவித்துக் கொண்டால் உயிருக்கே ஆபத்தான முடிவை எடுத்துக்குவாங்க.
நல்ல மகன் அவமானப்படுத்தப் பட்டாலும் தவறான முடிவு எடுக்கமாட்டாங்க.
இப்ப அதிமுகல இந்த 10 வருஷத்துல சம்பாதிச்ச மொத்த பேரும் கூண்டோடு கைலாசம் போக போறாங்க அதாவது BJPக்கு.
காரணம் IT RAID மிரட்டல்
 

Kanagaraj Mahalingam  : நூறு விழுக்காடு உண்மை
 

Rajesh Sethuraman Rajendran  : பார்ப்பன ஏடுகள் மக்களை தொடர்ந்து குழப்பிக் கொண்டிருந்ததும் முக்கிய காரணம்.. இனி அந்த பருப்பு வேகாது..

Bala Athi  : நம் மக்களுக்கு சரியானதைத் தெரிவு செய்யும் தெளிவு கிடையாது. சினிமாவில் கூடப் பார்த்தால் உயிரைக் கொடுத்து நடிக்கும் கமலுக்கு இரண்டாம் இடம். சும்மா கிம்மிக் வேலை செய்யும் ரஜினி முதலிடம்.இதேதான் எம்ஜிஆர் சிவாஜி விஷயத்திலும். அரசியலிலும் கிம்மிக் வேலை செய்பவர்களைத் தூக்கி உட்கார வைத்து விடுவார்கள். இனிமேல் நிலைமை மாறும் என்று நம்புவோம்.

James David  : இந்த தேர்தல் வெற்றிக்கு பின்னர்,
எங்கு எங்கு, யார் யார், எந்த எந்த விசயங்களில் திமுகவைப் பற்றிய தவறான தகவல்களை கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவற்றை களையெடுத்து மக்களை தெளிவு படுத்த வேண்டும்.
மேலும் இந்த தலைமுறையினரும் இளைஞர்களும் விரும்பும் மாற்றங்களை, செயல்களை, திட்டங்களை செயல்படுத்தி அடுத்த தலைமுறையினரை நம் வசப்படுத்தினால், இந்த தேர்தல் மட்டுமல்ல, இனி எந்த தேர்தலிலும் வெற்றி நம் பக்கம் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக