வியாழன், 22 ஏப்ரல், 2021

உலக அரங்கில் இந்தியாவின் பெயர் சரிகிறது? காரணம் கொரோனாவா? பாஜகவா?

First case of 'double mutant' COVID-19 variant confirmed in Quebec. (கியூபெக் மாகாண மொன்றியல் நகரம்)இன்று கனடாவில் பிரெஞ்சு மொழி தினசரியான ஜூர்னல் து மான்ரியல் பத்திரிகையில் கோவிட் வைரஸின் புதிய பரிமாண வைரஸால் பாதிப்புற்ற ஒருவர் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது இதில் ஒரு வில்லங்கமான உள்குத்து ஒன்றுள்ளது . இந்த பத்திரிகையின் முகப்பக்கத்தில் ஜஸ்டின் ட்ருடோ இந்திய உடையில் காட்சி தரும் படத்தை இந்த செய்தியை குறிக்கும் படமாக வெளியிட்டுள்ளது கொரோனா என்றாலே சீனர்கள்தான் என்று அவர்கள் மீதான ஒரு சமூக வெறுப்புணர்வு பல இடங்களிலும் இருக்கிறது
சீனர்களின் வியாபாரங்களுக்கு அதிக மக்கள் செல்வதில்லை
அதே போன்றதொரு நிலைமை மேற்கு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் எதிர்காலத்தில் வரலாம்?
ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரும் தோல்வியை பாஜக ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கியுள்ளனர்
மகாராஷ்ட்ரா குஜராத் உத்தர பிரதேசம் போன்ற வடஇந்திய மாநிலங்களில் நடக்கும் மனித அவலங்களை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
பெரிய ஊடகங்கள் என்னதான் போர்த்து மூடி மறைத்தாலும் தனிமனிதர்களின் செல்போன்கள் தொலைக்காட்சிகளை விட வேகமாக செய்தி பரம்பலை செய்கின்றன.
சீனர்கள் கொரோனா கெட்டபெயரில் இருந்து ஓரளவு மீண்டு வருவது போல் தோன்றுகிறது.
ஆனால் இந்திய அரசோ அந்த இடத்தை (கொரோனாவின்) பிடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.
நிலைமை இப்படியே போனால் பயண தடை மட்டுமல்ல . ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார தடை கூட பாஜக அரசு மீது விதிக்கப்படலாம் அந்த வாய்ப்பு தாராளமாகவே உள்ளது.
ஊழல் மற்றும் அன்றாட மனித வாழ்வின் அவலங்கள் என்பதை எல்லாம்,
ஓரளவுக்கு மேல் அனுமதிக்க முடியாது என்பதுதான் மேற்கு நாடுகளின் அடிப்படை கொள்கையாகும்.
அதிலும் எல்லையற்ற ஊழலை ஒருபோதும் எந்த வளர்ச்சி அடைந்த நாடும் அனுமதிக்காது.
நட்பு நாடுகளாக இருந்தாலும் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது .
MONTREAL -- A fifth variant type of the novel coronavirus COVID-19 has been detected in Quebec.
The health department in the Mauricie-et-Centre-du-Quebec region reported Wednesday that the B.1.617 variant, first sequenced in India, has been reported.
"This is the first case associated with the Indian variant in Quebec," said CIUSSS de la Mauricie-et-du-Centre-du-Quebec information officer Julie Michaud.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக