வியாழன், 29 ஏப்ரல், 2021

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கண்காணிக்கும்

 Giridharan N | Samayam TamilUpdated: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதி நகல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த பிறகு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்..
இதைத் தொடர்ந்து 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான இந்த குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் சித் சிங், சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்சிஜன் தொழிற்சாலை குறித்து தொழில்நுட்ப அறிவு சார்ந்த அதிகாரி, மத்திய சுற்றுச்சூழல் வனத் துறை பரிந்துரையின்படி தேர்ந்தெடுக்கப்படும்


இரண்டு சுற்றுச்சூழல் வல்லுனர்கள், ஆலை எதிர்ப்பாளர்கள் 2 பேர் என்று மொத்தம் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவ பயன்பாட்டிற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மட்டுமே ஆலையை இயக்க வேண்டும். வேறெந்த நோக்கத்துக்கும் ஆலையை இயக்கக்கூடாது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வழங்கிய உத்தரவை ஆலையை இயக்க முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மாவட்ட கலெத்டரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக