புதன், 21 ஏப்ரல், 2021
வேலூர் மருத்துவமனையில் 7 நோயாளிகள் உயிரிழப்பு! ஆக்சிஜன் குழாயில் கசிவு
malaimalar :
7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில்
மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2
வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: வேலூர்
அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள்
உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது . இதனிடையே,
வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட
பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து வெளியான செய்தியின்
அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக