செவ்வாய், 13 ஏப்ரல், 2021

லெஸ்பியன் தாய்".. அலறி அடித்து ஓடிய 2 மகன்கள்.. நரபலி ஆபத்து .. அதிர்ந்த போலீஸ்!

 மிளகாய் பொடி
Hemavandhana - /tamil.oneindia.com :  ஈரோடு: "லெஸ்பியன்" அம்மா, தங்களை கொடுமைப்படுத்துவதாக, 15 மற்றும் 6 வயது மகன்கள், ஈரோடு எஸ்பியிடம் அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு ரங்கம்பாளையம் ரயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த இரு சிறுவர்கள்..
ஒருவனுக்கு 15 வயது, மற்றொருவனுக்கு 16 வயதாகிறது.. இருவரும் சகோதர்கள். இவர்கள் 2 பேரும் திடீரென எஸ்பி தங்கதுரையிடம் ஒரு புகார் கொண்டு வந்திருந்தனர்..
அந்த புகாரில்,"எங்கள் தந்தை ராமலிங்கம் 42, டெக்ஸ்டைல் வியாபாரி... அம்மா ரஞ்சிதா 36, புன்செய் புளியம்பட்டியில் வசித்தோம். எங்கள் அப்பா 2வதாக இந்துமதி 32, என்பவரை கல்யாணம் செய்தார்.
மாமா நாங்கள் ஈரோடு ரங்கம்பாளையம் ரயில் நகரில் வசித்து வந்தோம்..
இந்துமதியின் தோழி சசி. 38 வயதாகிறது..
இவரைதான் எங்கள் அம்மா ரஞ்சிதா கல்யாணம் செய்து கொண்டார்...
சசியை அப்பா என்றும், தந்தை ராமலிங்கத்தை மாமா என்றும் அழைக்குமாறு, எங்களை மிரட்டுகின்றனர்... 4 பேரும் ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு, எங்களை ஸ்கூலுக்கு செல்ல விடாமல் வீட்டு வேலைகளை செய்ய வைக்கின்றனர்.
ராமலிங்கம் பள்ளியில் இருந்து, டிசியையும் வாங்கி கொண்டு சென்று விட்டனர். இப்போது எங்கள் அம்மா ரஞ்சிதா, சசி, ரயில் நகரில் வசிக்கின்றனர்... அப்பா ராமலிங்கம், இந்துமதி, புன்செய் புளியம்பட்டியில் வசிக்கின்றனர்.. எங்களை நரபலி கொடுத்து விடுவார்கள் என்று பயந்து கொண்டு, அதே பகுதியில் உள்ள எங்க தாத்தா வீட்டுக்கு பிப்ரவரி 23ல் சென்று விட்டோம்.

புகார் தாத்தாவுடன் சென்று, ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தோம். அப்போது, எங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி சமரசம் பேசினர். நாங்கள் மறுத்து விட்டோம். இப்போது தாத்தா, பாட்டி, மாமா, அத்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.எங்களை கொடுமைப்படுத்திய அம்மா தாய் ரஞ்சிதா மற்றும் சசி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

2 சிறுவர்கள் அளித்த இந்த புகார் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. ராமலிங்கம் இரண்டு மனைவிகளுடன் ஒரே இடத்தில் தான் வசித்து வருகிறார்.. இதில் 2வது மனைவி இந்துமதியை தேடி அவரது தோழி சசி என்பவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து போயுள்ளார்.. இவருக்கு தனலட்சுமி என்று இன்னொரு பெயர் உள்ளதாம்.. அப்படி தோழியை பார்க்க வீட்டுக்கு வரும்போதுதான், ரஞ்சிதாவுடன் சகசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த விஷயம் ராமலிங்கத்துக்கும் தெரிந்துள்ளது.. அதனால் அவர் ரஞ்சிதாவை சக்தி என்று சொல்வாராம்.. சசியை சிவன் என்று சொல்வாராம்.. ஒருகட்டத்தில் இந்த 2 குழந்தைகள் முன்பும் ரஞ்சிதாவுக்கும் சசிக்கும் கல்யாணமே நடந்துள்ளது.
இப்போது அந்த பெண் தோழி, 2 சிறுவர்களுக்கும் அப்பாவாகி விட்டார்.. அப்பா ராமலிங்கம், மாமாவாகி விட்டாராம்.. மாமா என்றுதான் குழந்தைகளை கூப்பிட சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளனர்..

அவ்வாறு கூப்பிட மறுத்ததால், 2 பிள்ளைகளுக்கும் மிளகாய் பொடி சாப்பாடு தந்து சித்ரவதை செய்துள்ளனர்.. அதை மென்று விழுங்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.. குடிக்க தண்ணியும் தரவில்லையாம்.. வெற்று உடம்பெல்லாம் மிளகாய் பொடியை தேய்த்து, இரண்டு பிள்ளைகளையும் மொட்டை மாடியில் படுக்க வைப்பார்களாம். பாத்ரூம் சுத்தம் செய்வது முதல் எல்லா வேலைகளையும் இந்த2 மகன்களும் பையன்கள் செய்து வந்துள்ளனர்.. இதில் ஏதாவது குறை இருந்தால், பாத்ரூம் கிளீன் செய்ய வைத்திருக்கும் கிருமிநாசினியை குடிக்க வைப்பார்களாம்..

ஒருநாள், ராமலிங்கம், ரஞ்சிதா, சசி 3 பேரும் பெட்ரூமில் பேசி கொண்டிருந்தார்களாம்.. அப்போது, 2 மகன்களையும் நரபலி தந்துவிட்டால், பெரும் சக்தி நமக்கு கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.. இதை கேட்டுதான், பிள்ளைகள் அலறி அடித்து பாட்டி வீட்டுக்கு சென்று விட்டனர்.. இப்போது எஸ்பி வரை புகார் வந்துள்ளது.. இனிதான் நடவடிக்கை தீவிரமாகும் என்று தெரிகிறது.


ராமலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக