ஞாயிறு, 21 மார்ச், 2021

தமிழக வேட்பாளர்களிலேயே கமல் ஹாசன்தான் மிகப்பெரிய பணக்காரர்! Kamal Haasan richest candidate in Tamil Nadu Assembly polls

Crowds see me as light in their houses: MNM founder Kamal Haasan- The New  Indian Express
Sunday Island :  Haasan quoted his movable properties over INR 450 million. These include two vehicles – BMW 730 LD and Lexus LX 570, the combined valuation of which comes to INR 30.7 million. The veteran actor pegged his immovable properties, including commercial buildings and agricultural land, at a little over INR1.31 billion. He also declared two residential buildings in Chennai, cumulatively priced at INR 195 million, and a joint property in London worth INR25 million. The superstar stated that he has INR 495 million in liabilities, adding that he has no spouse or dependents

கலைமொழி : திரையுலகமும் கறுப்பு பணமும் பிரிக்க முடியாத கூட்டாளிகள்  
அதிலும் பெருவாரியான கறுப்புப்பணம் சிக்கி இருப்பது பெரிய நட்சத்திரங்களிடம்தான் .
எவ்வளவு பெரிய நடிகன் என்று கூறப்படுகிறது
அவ்வளவு தூரம் அவர் ஒரு கறுப்புப்பண முதலை என்பதுதான் உண்மை.
இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
இந்த கறுப்புப்பணத்தை பாதுகாப்பது என்பது இலகுவான காரியம் அல்ல .
எப்போதும் அதிகாரிகளுக்குக்ம் பல ஆட்சியாளர்களுக்கும் மட்டுமல்ல பல காப்பரேட்டுக்களுக்கும் கமிஷன் அளக்க வேண்டிய நிர்பந்தங்களும் உண்டு  அவை எல்லாம் கிவ் அண்ட் டேக் பாலிசிதான் இறுதியில் எல்லாமே இலாபமாகவேதான் இருக்கும்
இந்த இடத்தில் நடிகர்களுக்கு தவிர்க்கவே முடியாத ஒரு பாதுகாப்பு கவசமாக அரசியல் வந்து விடுகிறது
இதில் அடுத்த படி வருமானமாக அரசியல் கட்சியும் மாறிவிடுகிறது
தேர்தலில் நிற்பது வெற்றி பெறுவதற்கு என்பதிலும் பார்க்க பெரிய கட்சிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் காசு வாங்குவதற்கும் கறுப்புப்பணத்தை பாதுகாப்பதற்கும் உரிய பொறிமுறையாக மாறியுள்ளது
பாஜக ஆட்சியில் இந்த சினிமாக்காரர்கள் அசல் பாஜககாரர்கள் ஆகவே மாறிவிட்டார்கள்  Kamal Haasan richest candidate


கமல் தொடக்கம் விஜயகாந்த் சரத்குமார் ரஜினி வரைக்கும் இதுதான் சங்கதி.
இதே பார்முலாதான் சீமானுக்கும் பொருந்து வருகிறது
ஆனால் சீமானை பொறுத்தவரை திரைப்படங்கள் மூலம்  செய்யவேண்டிய வேலையை ஈழப்போராட்டம் புலிப்புராணம் போன்றவற்றின் மூலம் செய்துவிட்டார்  
அதற்கு புலி ரசிகர்களின் அறியாமை அவருக்கு கைகொடுத்தது
தமிழக சட்டமன்ற தேர்தலில் இருக்கும் வேட்பாளர்களிலேயே கமல் ஹாசன்தான் பெரிய பணக்காரன் என்பது அதிசயம் இல்லை . இன்னும் சொல்ல போனால் இந்த ஐலேண்ட் பத்திரிகை  கூட கணக்கில் காட்டா முடியாத அளவு அவரின் சொத்துக்கள் பல வெளிநாடுகளில் உள்ளன .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக