வெள்ளி, 19 மார்ச், 2021

விஜய், சூர்யா என்ன மன்னிச்சிடுங்க - மீரா மிதுன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

cinema.maalaimalar.com :தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். 

அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துகளை பதிவு செய்து வந்த இவர், சமீபத்தில் விஜய், சூர்யா, ஜோதிகா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாக பேசிதற்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீராமிதுன்.                                                அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் இதுவரை நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசியதற்கு, திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம்.      

                    மீரா மிதுன் அப்சரா ரெட்டியின் சைபர் புல்லிங்கில் சிக்கி, நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசி விட்டதாகவும், அதற்காக அவர்களிடமும், அவர்களது ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் அப்சரா ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீரா மிதுன் கோரிக்கை விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக