ஞாயிறு, 28 மார்ச், 2021

தமிழ்நாட்டு கோயில்களை பறிக்க முயலும் ஆர் எஸ் எஸ்! அடியாள் வேலை பார்க்கும் சாமியார்கள்

May be an image of 1 person, beard and text that says 'R.'
May be an image of 2 people and people standing
May be an image of 1 person and text that says 'கோவில்களை சமூகத்திடம் ஒப்படைக்கும் சட்டங்களை நாம் இயற்றுவது அவசியம். இது நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல. சட்டப்படி, ஒரு சமூகத்திற்கு நியாயமாக சொந்தமானது அவர்கள் வசம்தான் இருக்கவேண்டும். #கோவில்அடிமைநிறுத்து @SadhguruJV'

LR Jagadheesan : ஒரு சாமியாரு மதுரை ஆதீனத்தையும் அதன் ஏராளமான சொத்துக்களையும் ஆட்டைய போட பார்த்தாரு.
முதலில் ஏமாந்த மதுரை ஆதீனம் பின்னாடி உஷாராயி அந்தாள பத்திவிட்டாரு.
தன்னையும் தன் பொறுப்பில் இருக்கும் ஆதீன சொத்துக்களையும் தக்கவெச்சிகிட்டாரு.
இன்னொரு சாமியாரு மொத்த தமிழ்நாட்டு கோவில்களின் ஏராளமான சொத்துக்களை முழுங்கறதுக்கு முயற்சி பண்றாரு.
தமிழ்நாட்டு இந்துக்களே உஷாரா இருங்க.
ஏன்னா இதுக ரெண்டுமே போலி சாமியார்கள் மட்டுமில்ல, அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுவதில் கில்லாடி சாமியார்களும் கூட.
தமிழ்நாட்டுக்கோவில்கள் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கும் அரசுகளிடம் இருப்பதால் தான் அந்த கோவில்களின் மொத்த சொத்துக்கணக்கும் அவற்றின் நிலங்கள், சிலைகள், வருவாய் எல்லாமே பொதுவில் பகிரங்கமாக பார்க்கவும் பரிசோதிக்கவும் தவறுநடந்தால் அதை தட்டிக்கேட்கவும் தண்டிக்கவும் திருத்தவும் முடிகிறது.
மாறாக இந்த போலி சாமியார்களின் கைகளுக்குப்போனால் இந்த கோவில்களின் கதி என்ன?
அவற்றின் சொத்துக்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்?
காசுக்கேற்ப பணக்காரர்களுக்கு மட்டுமே சிறப்பு தரிசனம் கொடுக்கிற போலிசாமியாரான ஜக்கிவாசுதேவ் போன்றவர்களின் கைகளுக்கு தமிழ்நாட்டு கோவில்கள் போனால் அது அனைவருக்கும் பொதுவான ஆலயமாகவா இருக்கும்?


தன்னுடைய ஆஸ்ரமத்தையே பணக்காரர்களின் பொழுதுபோக்கு club மாதிரிநடத்தும் இந்த நபர் கைகளில் தமிழ்நாட்டுக்கோவில்களின் ஏராளமான கோவில்களும் அதன் சொத்துக்களும் என்னவாகும்? வேட்டைக்காடாகாதா?
அதுவும் வடநாட்டு கும்பல்களின் ஆதிக்கத்துக்கு போகாதா?
அங்கே இறைத்தமிழ் இருக்குமா? வளருமா?
தமிழர்கள் இன்றுபோல் இந்த கோவில்களில் புழங்க முடியுமா?
எனவே தமிழ்நாட்டு கோவில்களை கொள்ளையடிக்க முயலும் போலிசாமிதார்களிடம் இருந்து தமிழ்நாட்டுக்கோவில்களையும் அதன் ஏராளமான சொத்துக்களையும் பாதுகாக்க உறுதிபூணுங்கள்.

 May be an image of 6 people, people standing and outdoors

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக