ஞாயிறு, 7 மார்ச், 2021

பாஜக தன்னிச்சையாகவே வேட்பாளர்களை அறிவித்தது! அதிர்ச்சியில் அதிமுக கூட்டணி

May be an image of 18 people and text that says 'தேர்தல் வந்தாச்சு ELECTION BREAKING சட்டமன்ற தேர்தல் பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல். கே.டிராகவன் எச்.ராஜா மயிலாப்பூர் காரைக்குடி குஷ்பு சேப்பாக்கம் டால்பின் ப்ரீதர் தணிகைவேல் வேளச்சேரி திருவண்ணாமலை 06 MAR 2021 சிவமுருக ஆதித்தன் அண்ணாமலை தூத்துக்குடி ணத்துக்கடவு பிரேம் ஆத்தூர் கேசவன் காஞ்சிபுரம் NEWS TAMR ஏழுமலை சிதம்பரம் னிவாசன் www.news7tamil.Live கோவை தெற்கு எல்.. முருகன் சக்கரவர்த்தி கார்வேந்தன் ராசிபுரம் திருத்தணி பழனி NEWS நரேந்திரன் ஒசூர் கருப்பு. வினோஜ் முருகானந்தம் கார்த்தியாயினி நயினார் நாகேந்திரன் கவுதமி பி.செல்வம் திருவாரூர் வேலூர் நெல்லை ஜயாளையம் துறைமுகம்'
Ganapathy Sundaram :வேலியில போற ஓணாண புடிச்சு வேட்டிக்குள்ள விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு கதரும் அதிமுக... அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொகுதிகள் எவை எவை? என தீர்மானிக்கப்படாத நிலையில்,
 பல இடங்களில் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னரே பாஜகவே தாமாகவே சில தொகுதிகளை கைப்பற்றிக் கொண்டது.
அந்த தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தி பிரசாரத்தையும் பாஜக தன்னிச்சையாக தொடங்கிவிட்டது.
பாஜகவின் பிரபலங்களான நடிகைகள் குஷ்பு, கவுதமி, மாஜி எம்.பி. சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன் என பலருக்கும் இந்த தொகுதிதான் என பாஜகவே சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அத்தனை சட்டசபை தொகுதிகளும் தங்களுக்குதான் என அடம்பிடிக்கிறதாம் பாஜக.
அத்துடன் இல்லாமல் அதிமுக வெல்லும் வாய்ப்புள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சில முக்கிய தொகுதிகளுக்கும் பாஜக மல்லுக்கட்டுகிறதாம்.
குறிப்பாக தென்மாவட்ட கோவில் நகரங்களை குறிவைத்து அதிமுகவிடம் பிடிவாதம் காட்டுகிறதாம்.
பாஜகவின் இந்த தன்னிசையான போக்கை அதிமுக தரப்பு இம்மியளவுக்கு கூட விரும்பவில்லை.
இப்படி ஒரு அடாவடித்தனமான கட்சியாக, கூட்டணியாக ஒருபோதும் எந்த கட்சியும் நடந்து கொண்டதே இல்லை என்பது அதிமுக மூத்த தலைவர்களின் கருத்து. தேர்தல் களத்திலேயே இப்படி என்றால் ஜெயித்துவிட்டார்கள் எனில் என்ன என்ன செய்வார்களோ? என்கிற ஆதங்கமும் அவர்களிடம் வெளிப்படுகிறது.- செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக