இந்நிலையில்,
கொழும்பு துறைமுக கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்கும் பணி இந்தியா,
ஜப்பானுக்கு மட்டுமே வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இத்தகவலை அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கேஹிலியா ராம்புக்வெல்லா
உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கிழக்கு கன்டெய்னர் முனைய பணியை
இந்தியா, ஜப்பானுக்கு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இரு
நாடுகளுக்கும் 85 சதவீத பங்குகள் வழங்கப்படும்”என்றார்.
புதன், 3 மார்ச், 2021
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை
daylithanthi: அதே சமயம், இந்த முனையத்தின் மறுபுறத்தில் கொழும்பு
சர்வதேச கன்டெய்னர் முனையத்தை சீன நிறுவனம் அமைத்து வருகிறது. இதனால்,
சீனாவின் அழுத்தம் காரணமாக இருக்குமா? என்றும் சந்தேகிக்கப்பட்டது.
எனினும், சர்வதேச உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்கும்படி இந்திய அரசு
தொடர்ந்து வலியுறுத்தியது.
இந்தியா
மற்றும் ஜப்பான் இந்த முனையத்தை எவ்வாறு இணைந்து கட்டுப்படுத்தும் அல்லது
பிரித்துக்கொள்ளும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை
வெளியிடப்படவில்லை. இலங்கையின் இந்த சமீபத்திய சலுகைக்கு கொழும்புவில் உள்ள
இந்திய தூதரகம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக கருத்து எதையும்
தெரிவிக்கவில்லை. இலங்கையின் இந்த புதிய முன்மொழிவு தொடர்பாக ஜப்பானும்
கருத்து தெரிவிக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக