சனி, 13 மார்ச், 2021

இனி நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்... மத்திய அரசு அறிவிப்பு

 Vigneshkumar - tamil.oneindia.com : டெல்லி: வரும் 2021-22ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் பி.எஸ்சி நர்சிங் மற்றும் லைஃப் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கான மாணவ சேர்க்கைக்கும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகியவற்றுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், வரும் 2021-22 கல்வியாண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் இனி நீர் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


ஏற்கனவே மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்விற்கே தமிழகத்தில் எதிர்ப்பு தொடரும் சூழலில் தற்போது செவிலியர் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக